UPDATE ABOUT GCE OL EXAMINATION 2022
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக எந்த தீர்மானத்தையும் பரீட்சைத் திணைக்களமோ கல்வி அமைச்சோ அறிவிக்கவில்லை.
பரீட்சார்த்துகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் இடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் தபால் திணைக்களம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதே நேரம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று, பரீட்சை ஏற்பாடுகள் தொடர்பாக மாகாண வலயஒருங்கிணைப்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் zoom ஊடாக நடைபெற்றது.
இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒழுங்குபடித்தலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பரீட்சை ஒழுங்குகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. கோவிட் நிலமைகளின் கீழ் சுகாதார ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்ட போதிலும் இம்முறை மேலதிக மேற்பார்வையாளர் தேவையாயின் மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பல விடயங்கள்கலந்துரையாடப்பட்டன.
எனினும் பரீட்சையை பிற்போடுவது தொடர்பாக இதில்கலந்துரையாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
எனினும் நாட்டின் தற்போதைய சூழலில் பரீட்சை நடாத்துவதில் பல சிக்கல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடாத்துவதா அல்லது மீண்டும் பிற்போடுவதா என்பது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம், அல்லது கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இதுவரை உத்தியோகப்பூர்வ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.