
UPDATE ABOUT STRIKE- SCHOOLS
நாளை பாடசாலை நடைபெறுமா???
நாளை (09) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலையில் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது..
கடந்த காலங்களில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெற்றபோது ஆசிரியர் சங்கம் அதில் கலந்து கொள்வது தொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிடுவது வழமை..
குறித்த அறிவித்தலில் தொழிற்சங்க போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் கலந்துகொள்வது தொடர்பான விடயம் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இந்த முறை குறித்த தொழிற்சங்க போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் கலந்துகொள்வது தொடர்பான எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தலும் இதுவரை வெளியாகவில்லை.
எனவே நாளை பாடசாலை நடைபெறும்.. எதிர்வரும் காலங்களில் இது தொடர்பான ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தல் ஏதும் வெளியானால் உடனடியாக உங்களுக்கு அறியத்தரப்படும்..