UPDATE ABOUT STRIKE- SCHOOLS
நாளை பாடசாலை நடைபெறுமா???
ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகும் வரை தொடர் வேலை நிறுத்தம் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி அறிவிப்பு..!
கொலைகார, அடக்குமுறை மற்றும் அடக்குமுறை அரசாங்கமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகும் வரையில் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தை தொடர தீர்மானித்துள்ளன.
இதன்படி அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், பிரிவேனா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மே 10ஆம் தேதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலையில் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது..
ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் புதன்கிழமை காலை 7 மணியளவில் தளர்த்த படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது..
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பட்சத்திலும் ஆசிரியர் சங்க வேலைநிறுத்த புறக்கணிப்பு காரணமாக நாளை பாடசாலை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.எனினும் இது தொடர்பில் உங்கள் பிரதேச பாடசாலை அதிபரிடம். உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..