UPDATE ON HOLIDAY FOR SCHOOLS 30 JUNE
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தினத்துக்கான பாடசாலை நடவடிக்கையை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.