UPDATE ON TERM HOLIDAY FOR SCHOOLS 2023-2024
பாடசலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை நீடிப்பு! – கல்வி அமைச்சு
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உயர் தரப் பரீட்சையின் விவசாயப் பாட மீள் பரீட்சையை பெப்ரவரி 1 ஆம் திகதி நடாத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, கல்வி அமைச்சு பாடசாலை விடுமுறையை தற்போது நீடித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள், ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.