ICT APTITUTE TEST 2020/2021- RAJARATA UNIVERSITY AND VAVUNIYA CAMPUS

common aptitude test for the selection of candidates for the bachelor of science in information and communication technology degree program at the rajarata university of Sri Lanka and the campus of the university of Jaffna.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் விஞ்ஞானமானி பட்டப்படிப்பு கற்கை நெறிக்கான உளச்சார்பு பரீட்சை விண்ணப்பிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது..

நாட்டில் நிலவும் அசௌகரியமான நிலைமை காரணமாக, பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது..

எனினும் விண்ணப்பம் முடிவு திகதியான ஜூன் மாதம் பத்தாம் திகதியில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை..

குறித்த கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகைமை தொடர்பான விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கை நூலின் 99 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

 தகுதிகாண் பரீட்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிலையங்களில் ஆங்கில மொழியில் மாத்திரம் நடைபெறும் என்பதை கவனிக்கவும்.

 பரீட்சைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்

ONLINE APPLICATION – APPLY

தகுதிகாண் பரீட்சைக்கான கட்டணமாக ரூபாய் 1000 மக்கள் வங்கியின் அனுராதபுரம் கிளையின்

008-1-001-8-1725841

என்ற கணக்கு இலக்கத்துக்கு இலங்கை ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் பெயரில் சாதாரண பண வைப்பு பற்றுச்சீட்டு மூலமாக எந்த ஒரு மக்கள் வங்கியின் கிளையில் இருந்தும் செலுத்த முடியும்.

குறித்த பண வைப்பு பற்றுச் சீட்டின் பிரதியை விண்ணப்பப் படிவத்துடன் அனுப்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதித் தினம் 2021 ஜூன் மாதம் 10 ஆம் திகதி

குறித்த தகுதிகாண் பரீட்சை 2021 ஜூன் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பற்றி பின்னர் அறியத்தரப்படும்.

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களை நாடவும்.

FULL DETAILS

TAMIL GAZETTE – DOWNLOAD

ENGLISH GAZETTE- DOWNLOAD

SINHALA GAZETTE – DOWNLOAD

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கையேடு மற்றும் முழுமையாக விண்ணப்பம் நிரப்புவதற்கான வழிகாட்டுதல் என்பவற்றை நமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து கொள்வோம்..

இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் உயர் தர பெறுபேறுகள் வெளியான  நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.