தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் நிலவும் 196 பதவி வெற்றிடங்கள் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
National Youth Services Council Vacancies 2021
சாதாரணதர தகைமை மட்டும் கொண்டவர்கள் மற்றும் உயர்தர தகைமை மட்டும் கொண்டவர்கள் மற்றும் பட்டம் அல்லது NVQ தகமை கொண்டவர்களுக்கும் உரித்தான 22 வகையான பதவி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
1. முகாமைத்துவ உதவியாளர் 70 வெற்றிடங்கள்..
சாதாரண தர பரீட்சையில் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்களாக 4 திறமை சித்திகளும் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி
உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி.
2. இளைஞர் சேவை மன்ற அதிகாரி 52 வெற்றிடங்கள்..
சாதாரண தர பரீட்சையில் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்களாக 4 திறமை சித்திகளும் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி
உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி.
மேலதிகமாக இளைஞர் சேவை மன்ற செயற்பாடுகளில் இரண்டு வருடங்கள் பங்குபற்றி இருத்தல்..
3. விடுதி பரிபாலகர் – 11 வெற்றிடங்கள்.
சாதாரண தர பரீட்சையில் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்களாக 4 திறமை சித்திகளும் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி
உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி.
மேலதிக தகைமை யாக அரச நிறுவனம் அல்லது கூட்டுத்தாபனம் அல்லது அதிகார சபை அல்லது தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு வருட அனுபவத்தை கொண்டிருத்தல்..
4. உதவிப் பணிப்பாளர் 14 வெற்றிடங்கள்..
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்..(UGC approved degree)
மற்றும் ஒரு வருட அனுபவம்..
5. உதவிப் பணிப்பாளர் நிதி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்..
மற்றும் ஒரு வருட அனுபவம்..
6. உள்ளக கணக்காளர்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சம்பந்தப்பட்ட பட்டம்(Degree in accounting)
மற்றும் ஒரு வருட அனுபவம்
7.பொறியியலாளர் (சிவில்) – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்..மற்றும் ஒரு வருட அனுபவம்
8.வேலைத்தள அதிகாரி – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
9.தொழில்நுட்ப அதிகாரி – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
10.தயாரிப்பாளர் – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
11.பெறுகைமனு அதிகாரி – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
12.நிதி அதிகாரி – வெற்றிடங்கள் 03
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
13.உள்ளக கணக்காய்வு அதிகாரி – வெற்றிடங்கள் 01
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
14.ஆலோசனை சேவை அதிகாரி – வெற்றிடங்கள் 02
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்
கலைஞர் (இசை/நடனம்) – வெற்றிடங்கள் 07
உதவி நூலகாதிபதி – வெற்றிடங்கள் 01
உதவி தயாரிப்பாளர் – வெற்றிடங்கள் 01
தொழில்நுட்ப உதவியாளர் – வெற்றிடங்கள் 01
வலையமைப்பு வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் – வெற்றிடங்கள் 01
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து 03.05.2021 இதற்கு முன்னதாக
தலைவர் / பணிப்பாளர் நாயகம்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,இலக்கம் 65, high-level வீதி, மகரகம
எனும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் குறித்த பதவி தொடர்பான பெயர் விபரத்தை குறிப்பிடவும்.
விண்ணப்பதாரியின் கையொப்பம் அரச பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது சத்திய ஆணையாளர் அல்லது பிரசித்தி பெற்ற நொத்தாரிசு ஒருவர் அல்லது முப்படையின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் அல்லது அரசாங்கத்தின் நிரந்தர பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் ஆனால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..