கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் கமநல சேவை முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020
விண்ணப்ப முடிவுதிகதி 25.02.2021 வரை நீடிக்க பட்டுள்ளது.
தேவைப்படும் பொதுவான தகைமைகள்
1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
2.இலங்கையின் எந்தப் பாகத்திலும் கடமை புரிவதற்கான உடல் மற்றும் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் மற்றும் நடத்தை உடையவராகவும் இருத்தல்.
3.விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்தில் 18 வயதுக்குக் உரியவராகவும் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகைமைகள்
1. க பொ த சாதாரண தரத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது சிங்களம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்கள் அடங்கலாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்
2.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்தில் எனும் சித்தி அடைந்து இருத்தல் (பொது வினாப்பத்திரம் தவிர)
தொழில் தகைமைகள் மற்றும் அனுபவம் இருப்பின் விசேடமாக கருதப்படும் ஆனால் இது கட்டாயம் கிடையாது.
விண்ணப்ப முடிவு திகதிக்கு முன்னர் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் (முடிவுத் திகதி 25.02.2021)
பரீட்சை விதிமுறைகள்
எழுத்துப் பரீட்சையில் 40 அல்லது அதற்கு மேலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக பதவிகளுக்கு அமர்த்தப்படுவார்கள்.
பரீட்சை இரண்டு வினாத் தாள்களை கொண்டது
1.கணக்கிடு -காலம் இரண்டு மணித்தியாலம் (மொத்த புள்ளிகள் 100)
2. புரிந்துணர்வு காலம் இரண்டு மணித்தியாலம் (மொத்த புள்ளிகள் 100)
சம்பள அளவுத்திட்டம்
1.பொது நிர்வாக சுற்றறிக்கை 3/ 2016 இல. MN-01 -2016 சம்பள தொகுதியின் கீழ் ரூபா 27,140- 10×300- 11×350- 10×495- 10×660-ரூபா 45,540.00 ஆகும்.
விண்ணப்பப் படிவத்தை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி கீழ்வருமாறு
பரீட்சை ஆணையாளர் நாயகம்ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை,இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,பெலவத்தை,பத்தரமுல்ல”
‘Commissioner General of Examinations,Organization (Institutional and Foreign Examinations) Branch, Department of Examinations, Pelawatta,Battaramulla, P. O. Box. 1503
பரிட்சை கட்டணமாக அறவிடப்படும் சுமார் 600 ரூபாயினை பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் கீழ் உள்ள கணக்கில் வரவு வைக்கும் படி நாடளாவிய ரீதியில் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலும் செலுத்த முடியும்.பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட பட்ட இடத்தில் ஒட்டவேண்டும் குறித்த பற்றுச் சீட்டின் நிழல் பிரதி ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது பிற்காலத்தில் பயனுள்ளதாக அமையும்.
வர்த்தமானி அறிவித்தலை பெற —> download
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய
அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
Good jop i inrestd
Thank you
Inrestd job
Good job
Good job
Gd job I really interested
Good job I really interested
Good job I really interested..
Say