Urgent Notice to Aswesuma Beneficiaries: Data Update Required!
📢 அஸ்வெசும தகவல் புதுப்பிப்பு: கால அவகாசம் நீடிப்பு
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, இதற்கான காலக்கெடு இந்த மாதம் 10 ஆம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
யார் புதுப்பிக்க வேண்டும்?
2023 ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும்.
யார் புதுப்பிக்கத் தேவையில்லை?
2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை (Grievances) தெரிவித்த விண்ணப்பதாரர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், அவர்களின் தகவல்கள் ஏற்கனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தகவல்களை உறுதிப்படுத்தும் போது பின்வரும் ஆவணங்கள் அவசியம்:
- குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை (NIC).
- செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம்.
புதுப்பிக்கும் முறை:
இணைய வசதியுள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் இணையதளத்திற்குச் சென்று, QR தாளில் உள்ள உங்களது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி தகவல் முறைமைக்குள் பிரவேசித்து, தரவுகளை புதுப்பிக்க முடியும்.
தகவல்களை எவ்வாறு சரியாகப் புதுப்பிப்பது என்பது தொடர்பான விளக்கக் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் தகவல்களைப் பிழையின்றி உள்ளிடவும்.
தரவுகளை பதிவு செய்ய கீழே உள்ள REGISTER என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவு செய்ய முடியும்
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள name list என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
The Welfare Benefits Board has released the list of persons eligible to receive payments under the second phase of Aswesuma.The relevant list has been displayed on the notice boards of all Divisional Secretariat offices, and at the offices of the Grama Niladhari and the officers in charge.This list has also been published on the official website of the Welfare Benefits Board (www.wbb.gov.lk).