What are the things look for when you are applying for a job?
ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.முக்கியமாக நீங்கள் ஒரு உயர்தர முடித்த இளைஞர் ஆகவோ அல்லது பட்டதாரியாக இருந்தாலும் நீங்கள் பல வேலைக்கு விண்ணப்பித்து இருப்பீர்கள். ஆனாலும் ஒரு சரியான வேலை வாய்ப்பை உங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.அதற்கான காரணம் நீங்கள் சரியான முறையில் அந்த விண்ணப்ப படிவத்தை அனுப்பி இருக்கிறீர்களா என்பதுதான்.
என்னுடைய வாட்ஸ்-அப் குழுமத்தில் அங்கத்தவராக இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.தினமும் குறைந்தது மூன்று அரச வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆவது நாங்கள் கொடுத்து கொண்டு வருகிறோம்.
முதலில் ஒரு வேலைவாய்ப்பு தொடர்பான பதிவை நீங்கள் பார்வையிடும் பொழுது அதில் மேலோட்டமாக உயர்தர தகைமை அல்லது சாதாரண தர தகைமை என குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வாசித்தவுடன் ஆர்வத்தில் உடனே விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து அதனை நிரப்பி பலர் அனுப்பி விடுகின்றார்கள்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது குறித்த வாட்ஸ்அப் பதிவில் உள்ள லிங்கை கிளிக் செய்து நமது இணைய தளத்துக்குள் பிரவேசித்து முழுமையான விபரங்களை வாசியுங்கள்.உதாரணமாக சாதாரணதர தகைமை கொடுக்கப்பட்டிருந்தால் சில பாடங்களில் திறமைச் சித்தி கேட்கப்பட்டிருக்கும். எனவே உங்களுக்கு அந்தப் பாடங்களில் குறிப்பிட்ட தகமை உள்ளதா என்பதை சரி பார்த்த பின்னர் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்யுங்கள். (ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான விவரத்தை இணையதளத்தில் வாசிப்பதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் கூட செலவாக போவதில்லை. எனவே ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்களை ஒதுக்குவது எந்த தவறும் இல்லை)
அடுத்தது நீங்கள் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பின்னர் கவனிக்கவேண்டியது அதனை கடிதம் மூலமாக அனுப்ப வேண்டுமா அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமா என்பதுதான்.மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சுயவிபரக்கோவை வேண்டும்.பிடிஎஃப் வடிவத்தில் இருப்பதுதான் சிறந்தது. சுயவிபரக்கோவையை தயாரிப்பதற்கு இலவசமாக பல இணையதளங்கள் உள்ளன. அது தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள என்னுடைய இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது குறித்த விண்ணப்பப் படிவத்துடன் எந்த ஆவணங்களை இணைக்க வேண்டும் என்பது பற்றி.உதாரணமாக சில வேலை வாய்ப்பில் உங்களுடைய பிறப்புச் சான்றிதழ் கல்வி சான்றிதழ் அனைத்தையும் இணைக்கும் படி கொடுக்கப்பட்டிருக்கும்.எனவே உங்களுடைய பிறப்புச் சான்றிதழை கல்வி சான்றிதழ்களையும் நிறைய போட்டோ காப்பி பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய பிறப்புச் சான்றிதழ் கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் கேட்கப்படும்.எனவே உங்களுடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து உங்கள் தொலைபேசியிலோ கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் எல்லா வேலை வாய்ப்புகளும் இது உதவியாக இருக்கும்.
எப்பொழுதும் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை கடித உறைக்குள் வைத்து அனுப்பும் பொழுது கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் நீங்கள் எந்த பதவிக்காக இந்த விண்ணப்பத்தை அனுப்புகின்றீர்கள் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடுங்கள்.அதற்கான காரணம் குறித்த அரசு திணைக்களத்துக்கு ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து சேரும்.அதில் உங்களுடைய கடிதம் வேலைக்காக விண்ணப்பிக்கப்பட்ட கடிதம் என்பதை அவர்கள் கண்டறிந்து கொள் வதற்கு இது உதவியாக இருக்கும்.
முக்கியமாக பெரும்பாலும் போட்டிப்பரீட்சை களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான விபரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.எனவே குறித்த கட்டணத்தை எங்கு செலுத்த வேண்டும் அதனை எப்படி செலுத்த வேண்டும் அதே போல ஏவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை கவனமாக முதலில் வாசியுங்கள்.அது தொடர்பில் சந்தேகம் இருந்தால் என்னுடைய இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை அனுப்புங்கள்.
பணத்துக்கான கட்டணத்தை ஒருவேளை நீங்கள் பிழையாக செலுத்தி இருந்தால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பலர் என்னிடம் கேட்கின்ற இன்னுமொரு முக்கியமான கேள்வி குறித்த ஒரு வேலைக்கான அனைத்து தகைமைகளும் என்னிடம் உள்ளது ஆனால் ஒரே ஒரு பாடத்தில் மாத்திரம் எனக்கு அந்த குறிப்பிட்ட சித்தி இல்லை. நான் விண்ணப்பிக்க முடியுமா எனக் கேட்கிறார்கள்.
அரச வர்த்தமானியில் வெளியாகும் வேலை வாய்ப்புகளுக்கு பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மாத்திரமே வேலைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.எனவே உங்களுக்கு ஒரு பாடத்தில் மாத்திரம் சித்தி இல்லை என்பதற்காக உங்களுடைய விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இதனால் உங்களுடைய நேரமும் பணமும் வீணாக்குவது தான் மிச்சம். எனவே முழுமையான தகைமைகள் இருக்கும்போது மட்டுமே விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள்.
சில அரசு வேலை வாய்ப்புகளுக்கு குறிப்பிட்ட திணைக்களத்தால் விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதில்லை. அப்படியான வேலை வாய்ப்புகளுக்கு சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதற்காகவே ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மாதிரி விண்ணப்ப படிவங்களை நாங்கள் இணையதளத்தில் கொடுத்திருக்கிறோம்.எனவே நீங்கள் அந்த விண்ணப்ப படிவத்தை பார்த்து இது குறித்த வேலைக்குரிய விண்ணப்பப்படிவம் இல்லையே என்று குழப்பமடைய தேவையில்லை.
ஒரு வேலைக்கு உரிய விண்ணப்ப படிவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் பட்ச்சத்தில் எங்களுடைய வாட்ஸப் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கான உதவியை நாங்கள் வழங்குவோம்.(0773443581)
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களை வழங்கும் நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join
Leave a Reply