மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படலாம்.. ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது..-

பாடசாலைகளில் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முறையான எந்த வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்..

இவ்வாறு சரியான வழிகாட்டல் களுடன் கூடிய முறையான வேலை திட்டம் இல்லாத பட்சத்தில் எந்த நேரத்திலும் பாடசாலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.. மற்றும் பாடசாலைகள் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்..

அண்மைக் காலங்களில் அதிகமாக பாடசாலை மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் சம்பவங்கள் நாடு முழுவதும் பல பாடசாலைகளில் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது..

உதாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஐம்பத்தி எட்டு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை  மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..