Official Notice: 2025 A/L Examination Postponed Owing to Inclement Weather

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பரீட்சையை அடுத்த மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் பரீட்சைகள் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

27 நவம்பர் 2025 காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

இலங்கையின் தென் கிழக்கில் அமைந்திருந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ் காற்றழுத்தமாக மாறியுள்ளது. இது 5.9° வட அகலாங்கு மற்றும் 82.6° கிழக்கு தெவிட்டாங்கு அருகில், மட்டக்களப்பு நகரத்திலிருந்து சுமார் 210 கிமீ தென்கிழக்கில் மையப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 12 மணிநேரங்களில் இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ் காற்றழுத்தமாக மேலும் வலுப்படும் வாய்ப்பு மிக அதிகம்.

இந்த நிலைமையின் தாக்கம் காரணமாக, தீவில் நிலவும் கன மழையும் பலத்த காற்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவுறுத்தல்களுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும்; இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

வடக்கு-மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மி.மீ.-ஐ விட அதிகமான மிக கன மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வடக்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 150 மி.மீ.-ஐ விட அதிகமான மழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.

தீவின் பிற பகுதிகளிலும் 100 மி.மீ.-ஐ விட அதிகமான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் 60–70 கிமீ வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.