Schools Opens 3 Days at week 2022

Schools Opens 3 Days at week

நாளை (08) ஆரம்பமாகும் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த வாரம் வியாழன் போயா தினம் என்பதால், அதற்கு பதிலாக புதன்கிழமை பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு கற்கைகளை நடத்துமாறு மாகாண கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முடியாத பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்கள் மற்றும் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள் முடிவெடுக்க வேண்டும் எனவும், போதியளவு எரிபொருள் வழங்குவதில் சிரமம் உள்ள தூர பிரதேசங்களிலிருந்து வருகைத்தரும் ஆசிரியர்களை மட்டும் வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.