WEATHER UPDATE FOR SRILANKA DECEMBER 2025

Weather Update

English
WEATHER FORECAST FOR 01 DECEMBER 2025
Issued at 05.30 a.m. on 01 December 2025

The Deep Depression was located near latitude 12.3°N and longitude 80.6°E, about 300 km North-northeast of Kankasanthurai. It is very likely to move northwards, away from the island and weaken further.

Several spells of showers will occur in Northern, Western, Sabaragamuwa and Southern provinces and in Kandy and Nuwara-Eliya districts.

Showers or thundershowers may occur at a few places in Uva province and in Batticaloa and Ampara districts after 2.00 p.m.

Advisory: The general public is kindly requested to take adequate precautions to minimize damages caused by temporary localized strong winds and lightning during thundershowers.
தமிழ்
2025 டிசம்பர் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 டிசம்பர் 01 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

ஆழ் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காங்கேசன்துறைக்கு வடக்கு-வடகிழக்காக ஏறத்தாழ 300 கி.மீ தூரத்தில், வட அகலங்கு 12.3° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 80.6° இற்கு அண்மையில் நிலை கொண்டிருந்தது. இது வடக்கு திசையில் நகர்ந்து, நாட்டிலிருந்து விலகிச் செல்வதுடன் மேலும் வலுவிழக்கக் கூடும்.

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.