2023 SOBAKIRUTHU TAMIL NEW YEAR RAASI PALAN

2023 சோபகிருது தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப்போகின்றது தெரியுமா

கடக ராசியினைப் பொறுத்தவரை அஷ்டமச் சனியாக சனி பகவான் உள்ளே நுழைந்துள்ளார். சனி பகவான் 8 ஆம் இடத்தில் வலுவாக அமர்ந்துள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இடமாற்றம், வேலை மாற்றம் என ஆதாயம் நிறைந்ததாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள், இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும்; ஆனால் பணவரவு சீராக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக சோம்பல்கள் நிறைந்து இருந்தவர்களும், தற்போது சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவர்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தங்க நகைகளில் முதலீடு செய்து மகிழ்வீர்கள். கடன் தொந்தரவுகள் கட்டுக்குள் இருக்கும் காலகட்டமாக இருக்கும். கொடுத்த வாக்கினை கஷ்டப்பட்டுக் காப்பாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் வாக்குக் கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாக்குக் கொடுத்தல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள், தாமதங்கள் ஏற்படும். மிகப் பெரும் முயற்சிக்குப் பின்னரே வரன் அமையும். எதிரிகள் குறைவர், வீட்டினைப் புதுப்பிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். செய்யும் அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் இருத்தல் நல்லது.

உடல் நலன் ரீதியாக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் பெரிதாகும்; பிரியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். நிதானித்து பொறுமையுடன் செயல்படுதல் நல்லது.

மிதுன ராசியினைப் பொறுத்தவரை துன்பத்தையும், இன்பமற்ற நிலையினையும் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்க்கையில் கொண்டிருந்த உங்களுக்கு மங்களகரமான விஷயங்கள் நடக்கப் பெறும்.

ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்; அஷ்டம சனியும், 10 ஆம் இடத்தில் இருந்து குரு பகவானும் விலகிவிட தொட்டது துலங்கும் காலமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் ராகு பகவானுடன் குரு இணையவுள்ளார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தள்ளிப் போன திருமணங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். குல தெய்வ வழிபாடு உங்களுக்குச் சகலவிதமான ஏற்றங்களையும் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வேலையானது கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக பணப் புழக்கம் அதிகரிக்கும். இதுநாள் வரை சந்தித்த பண நெருக்கடியில் இருந்து வெளிவருவீர்கள். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.

எந்தவொரு விஷயத்திலும் பயப்படாமல் தைரியத்துடன் செயல்படுவீர்கள்; குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை விவாகரத்து வரை சென்ற கணவன்- மனைவி ஒன்று சேர்வர்.

பிரிந்து போன நண்பர்கள் – உறவினர்கள் உங்களின் அன்பினைப் புரிந்து கொள்வார்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை, பூர்விகச் சொத்துகள் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் நிறைய நன்மைகளை கொடுத்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூடவே சேர்த்து கொடுக்கப் போகின்றது. பயப்பட வேண்டாம். பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். குறிப்பாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக முதுகு வலி பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதை கவனிக்காமல் விட வேண்டாம். மற்றபடி நீங்கள் செய்யும் தொழில், செய்யும் வேலை குடும்பம் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை உங்களுக்கு கிடைக்கும்.

கடன் தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும். உடல்நலன் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. எதிரிகள் படிப்படியாகக் குறைவர், தொழில் நிமித்தமாக அபிவிருத்தி மிகச் சிறப்பாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிரமம் நிறைந்ததாக இருக்கும்; தடங்கல்கள், பிரச்சினைகள், அலைச்சல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த வரன் கைகூடும்.

கணவன்- மனைவி இடையேயான உறவில் தொய்வு ஏற்படும், வீடு, வாகனம் வாங்குதல், வண்டி- வாகனம் வாங்குதல் என்பது போன்ற முதலீடுகளைத் தயங்காமல் செய்யலாம்.

உங்களின் முயற்சிக்கு ஏற்ப வெற்றிகள் வந்து சேரும், தொழில்ரீதியாக அளவுக்கு அதிகமான முதலீட்டைச் செய்யாமல் இருத்தல் நல்லது. பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், வீண் செலவுகளால் காசு கரையும்; அதனால் பணப் புழக்கம் இருக்கையில் உடனடி முதலீடு செய்தல் வேண்டும்.

துலாம்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுபகிருது வருடத்தில் துலாம் ராசிக்கு ஆரோக்கியம், பொருளாதார நிலை, தொழில் என அனைத்திலும் ஓரளவு பின்னடைவு கொண்ட ஆண்டாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது பிறக்க உள்ள சோபகிருது புத்தாண்டில் உங்களுக்கு எல்லா மோசமான சூழலும் மாறி சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக அமையப் போகிறது

திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வரன் சிறப்பாக அமைய உள்ளது.
ஏனெனில் குருவின் பெயர்ச்சி காரணமாக அவரின் 7ம் பார்வை உங்கள் ராசி மீது பதிய உள்ளது. இதனால் வாழ்க்கைத் துணை அமைவது மட்டுமல்லாமல் வியாபாரத்தில் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
திருமண வாழ்க்கையில் இருந்த மன கசப்பு, பிரிவு ஆகியவை நீங்கி, குடும்பம் ஒன்று சேரும்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.

உங்களின் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் என உங்களுக்கு வருமானம் வரக்கூடிய அனைத்து விஷயங்களும் வலுவடையும்.
உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி முடிந்து நல்ல காலம் பிறந்துள்ள நிலையில், தற்போது குருவின் பார்வையும் உங்கள் மீது விழுவது மேலும் சிறப்பான பலனைத் தருவதாக இருக்கும்

ஏப்ரல் 14 சிம்ம ராசி அதிபதியான சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மேஷத்தில் சூரியன் உச்சம் பெற உள்ளார். மேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் நாள் தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகின்றோம்.
பிறக்க உள்ள சோப கிருது தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசிக்கு நிச்சயம் நல்ல பலன்கள் அதிகம் நடக்கும்.

கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும்.தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதோடு, உங்களால் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.

உங்களின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு நல்ல லாபம் பெற சாதகமான ஆண்டாக இருக்கும். உங்களால் உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

தொழில், வேலையில் வெளிநாடு சார்ந்த வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும்.

ம்ம ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இதுவரை திருமண விஷயத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறி, உங்கள் திருமண முயற்சிகள் சாதகமாக மாற வாய்ப்புள்ளது

குடும்பத்தில் சுப காரியங்கள் சிறப்பாக நடக்க சாதகமான சூழல் நிலவும். தந்தையின் வகையில் நல்ல ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.சகோதரர்களுடன் இருந்த மன கசப்பு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
இருப்பினும் குடும்பத்தில் அவ்வப்போது உடல் நல பிரச்னைகள் அதிகம் கவலை தரக்கூடியதாக இருக்கும். அதனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

ராகு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்துள்ளார், கன்னி ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் 8 ஆம் இடத்திற்குச் செல்வதால் உழைப்பைக் காட்டிலும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும், வேலைவாய்ப்புரீதியாக ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறைக்கு யோசித்துச் செயல்படுதல் வேண்டும்.

வெளிநாடு செல்ல நினைத்தோருக்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும், உடல் நலன் ரீதியாக உயர் மருத்துவச் சிகிச்சையினை மேற்கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும், விரயச் செலவு அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை அலைச்சல் ஏற்படும்

இடமாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய காலகட்டமாக இந்தக் குரு பெயர்ச்சி காலகட்டம் இருக்கும். மனம் தடுமாற்றம் நிறைந்து காணப்படும், குழந்தைகள்மீது உங்களின் கவனத்தினைச் செலுத்துங்கள்.

குடும்ப உறுப்பினர்கள் ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும்;  உடன் பிறப்புகளால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும்.

மீனம்

குடும்பம்: குடும்பத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு. ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தின் பொருளாதார உயர்வை முன்னிறுத்தி சில தியாகங்களை செய்ய வேண்டி வரும். பல கடினமான சந்தர்ப்பங்களை நீங்கள் எதிர்கொண்டாலும் உங்களை ஊக்குவிக்க குடும்பத்தினரின் ஆதரவு நிச்சயம் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது நல்லது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் சிறப்பாக அமைந்திருந்தாலும், போகப்போக அனுகூலமற்ற பலன்களை கொடுக்கும் என்பதால் உங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டிய தருணமாக இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் காதல் விவகாரத்தில் அனுகூலமற்ற பலன்கள் இருந்தாலும் படிப்படியாக நல்லதொரு முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பித்தால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திக்க நேரும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்ல

கும்பம்

குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்காக செலவிடுவது நல்லது. இவ்வாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் நீங்கள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்து இருப்பீர்கள். ஆனால் 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் உங்களுக்கு பொறுப்பு சுமையை குறைக்க இருக்கிறது. கடந்தகால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள்

தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் உங்களுக்கு கிடைக்க கூடிய அற்புதமான பலன்கள் மற்றவர்களை வியப்படையச் செய்யும். எதுவும் செய்யாமலேயே உங்கள் தகுதிக்கு ஏற்ப அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்கள் 2022ஆம் ஆண்டில் கவனத்துடன் இருப்பது நல்லது. இதுவரை சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருந்தது ஆனால் 2022ஆம் ஆண்டில் சுவாசம், நுரையீரல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். கண் தொடர்பான பிரச்சினைகளும் படை எடுக்க ஆரம்பிக்கும் எனவே ஆரோக்கிய ரீதியான விஷயங்களை கவனித்து கொள்வது நல்லது.

மேஷ ராசியினைப் பொறுத்தவரை பொருளாதாரம் ரீதியாக ஓரளவு தன்னிறைவு நிறைந்த மாதமாக இருக்கும், நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்

வேலைவாய்ப்புரீதியாக உங்கள் கனவு வேலை கிடைக்கும்.  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு முயற்சிகள் சார்ந்த விஷயங்களில் வெற்றி என்பது போன்ற நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும்.

ஆண்டின் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும், நீண்ட காலம் எடுத்துதான் ஆரோக்கியம் மேம்படும். உடல் நலன் ரீதியாக கூடுதல் கவனத்துடன் இருத்தல் நல்லது.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகி, சொத்துகள் கை வந்து சேரும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருந்தோருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரைப் பிரிந்து இருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். வாழ்க்கைத் துணைக்கு இருந்த உடல் நலக் கோளாறுகள் சரியாகும்.

தந்தையுடன் இருந்துவந்த மனச் சங்கடங்கள், பிரச்சினைகள் சரியாகும், தாய்வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும். கடன் தொல்லை குறையும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்பி எந்தவொரு முதலீட்டையும் செய்யாமல் இருப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்து வருதல் நல்லது.

தனுசு ராசியினைப் பொறுத்தவரை உறவினர்கள், குழந்தைகள், உடன் பிறப்புகள், உடல் நலன், பொருளாதாரம் என நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மன நொந்து இருந்திருப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன திருமணங்கள் கைகூடும். மறுமண முயற்சிரீதியாக உங்களுக்கான வரன் அமையப் பெறும்.

கணவன்- மனைவி இடையே மிகக் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பணவரவால் உங்களின் பழைய கடன்களை அடைத்து கடன் தொல்லையில் இருந்து முற்றிலும் மீள்வீர்கள்.

கடந்த காலங்களில் பண ரீதியாகச் சந்தித்த அவமானங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். நஷ்டத்தால் தொழிலை இழுத்துமூடும் நிலையில் இருந்தநிலையில் இனி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், பணப் புழக்கம் அதிகரிக்கும்.

பிரிந்த தொழில் கூட்டாளர்கள் உங்களின் நேர்மைத் தன்மையினைப் புரிந்து கொள்வார்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும், உடல் நலன் ரீதியாக இருந்துவந்த மிகக் கடுமையான பின்னடைவுகள் சரியாகும்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட்டு இருந்துவந்த நிலையில் தற்போது அதற்கான விடிவு கிடைக்கும் காலமாக இருக்கும். தந்தையுடன் இருந்த மனக் கசப்புகள் சரியாகும், பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகி நேர்மறையான முடிவுகள் அமையும்.

மகர ராசியினைப் பொறுத்தவரை அலைச்சல்கள், மன அழுத்தங்கள் போன்றவற்றினை கடந்த காலங்களில் கொண்டு இருப்பீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளிநாடு முயற்சிகள் கைகூடும். தொழில்சார்ந்த எந்தவொரு நகர்வும் இல்லாமல் இருந்தநிலையில் தற்போது ஓரளவு பண வரவு கையில் இருக்கும். தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.

விரயச் செலவுகள் ஏற்படும் காலகட்டமாக இருப்பதால் விரயத்தினை சுப விரயமாக முடிந்தளவு மாற்றிவிடுங்கள். புது வீடு கட்டுதல், வீட்டினைப் புதுப்பித்தல், வண்டி, வாகனங்கள் வாங்குதல், தங்கநகைகள் வாங்குதல், குடும்பச் சுற்றுலா செல்லுதல் என சுப விரயச் செலவுகளைச் செய்யுங்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை அலைச்சல்கள் நிறைந்ததாக இருக்கும்; மனம் தளராமல் வரன் தேடுதல் வேண்டும்; காரணம் இல்லாமல் வரனைத் தட்டிக் கழிக்காமல் இருத்தல் வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலன் சார்ந்த தொந்தரவுகளும், விரயச் செலவுகளும் ஏற்படும். மருத்துவரீதியான வீண் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டம் சார்ந்த பண வரவுகளை நம்பி எந்தவொரு முதலீட்டையும் செய்யாதீர்கள். குடும்பத்தில் நாவடக்கம் மிகவும் அவசியம்.

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை 5ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து இருந்து ஜென்ம ஸ்தானம், பாக்கிய ஸ்தானங்களைப் பார்க்கிறார்.

வேலைவாய்ப்புரீதியாக வெளியூர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுநாள் வரையில் சரியான வேலைவாய்ப்புகள் அமையாத நிலையில் தற்போது உங்கள் முயற்சிக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைக்கும்.

தொழில்ரீதியாக அரசு வங்கிக் கடன்கள், மானியம் போன்றவை கிடைக்கப் பெறும்; தொழில்ரீதியாக மந்தநிலை நீடித்த நிலையில் தற்போது ஓரளவு நகர்வு இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான முயற்சிகள், மிகக் கடுமையான செலவினங்களுக்குப் பின்னரே வரன் கைகூடும். வரன் தேடும் விஷயங்களில் பின் வாங்காமல், மனம் தளராமல் தேடவும்.

கடன் வாங்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து தேவை இருந்தால் மட்டுமே கடன் வாங்கவும். அடிக்கடி உடல் நலத் தொந்தரவுகள் ஏற்படும்; கடன் மற்றும் உடல் நலன் ரீதியாக கவனத்துடன் இருந்தால் மட்டுமே எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

நரசிம்ம பெருமான் வழிபாடு செய்து வருதல் நல்லது. கால பைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வருதல் வேண்டும்.