All you need to know about the National Fuel Pass
NEW UPDATE(31.07.2022)
நாளைமுதல் (Aug 01) எவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம்?
01.08.2022 திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் வாகனத்தின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டு QR code க்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை இன்று நள்ளிரவுடன் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையை சூத்திரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி எரிபொருளுக்கான விலையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
இதனால் ஒரு நபர் வாரத்தின் எத்தினத்திலாவது எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும். அதில் அவருடைய வாகனத்துக்கு வாராந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்ட எரிபெருளின் குறித்த அளவை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக மோட்டார் சைக்கிளுக்கு வாராந்த கோட்டா 4 லீட்டர் எனில் அதனை குறித்த வாரத்தில் ஒரு தடவையில் முழுமையாகவோ அல்லது அதே வாரத்தில் பகுதி பகுதியாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களான
மோட்டர் சைக்கிள் – 4 லீட்டர்
முச்சக்கரவண்டி – 5 லீட்டர்
கார், வேன் – 20 லீட்டர்
பஸ், லொறி – 50 லீட்டர்
என்ற அடிப்படையில் வாராந்த எரிபொருள் கோட்டா அமையும்.
இது ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதுப்பிக்கப்ட்டு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.
நீங்கள் உங்களுக்கான வாராந்த எரிபொருளை பெறாவிட்டாலும் அது ஞாயிற்றுக்கிழமையுடன் இரத்தாகி திங்கட்கிழமை புதுப்பிக்கப்படும்.
1. தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். கடைசி இலக்க எண் தகடு அமைப்பு, டோக்கன்கள் மற்றும் நடைமுறையில் இருந்த பிற ஏற்பாடுகள் அனைத்தும் நிராக்கப்படும். QR அட்டை மற்றும் கோட்டா அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்
2. QR அட்டை முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எரிபொருள் நிலையங்களில் QR அட்டை ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கண்காணிக்கப்படும்.
3. வாகன (Chassis Number) எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களைப் பயன்படுத்துவோர் நாளை முதல் வருவாய் உரிம எண்ணுடன் (Revenue License number) பதிவு செய்யலாம்.
4. அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் நிலையத்தின் ஊடாக அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
5. ஜெனரேட்டர்கள், தோட்டக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள், தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தேர்வு ஆகியவற்றை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
6. பல வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் அனைத்து வாகனங்களையும் தங்கள் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முடியும்.
7. பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இலங்கை அரச போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு டிப்போக்களில் ஊடாக வழங்கப்படும். அவை வழித்தட அனுமதி மற்றும் சேவையில் உள்ள கி.மீ.களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு ஒதுக்கப்படும்.
8. பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள், சுற்றுலாத் துறை, நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் டீசல் எரிபொருள் தேவைகளையும் இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.
9. அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும்.
10. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.