HOW TO REGISTER FOR FUEL PASS
UPDATE- இன்று (20) 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த பெரும்பாலானவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
நீங்கள் எவ்வாறு பதிவு செய்து கொள்வது?..
பதிவு செய்வதற்கு முன்னர் உங்கள் கையில் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் கீழ் வருமாறு..
- 1. உங்கள் தேசிய அடையாள அட்டை
- 2. உங்கள் வாகனத்தின் பதிவு இலக்கம்( உதார்ணம் – BAW 1234)
- 3.வாகன chasis இலக்கம் -( புகை பரிசோதனை report இல் அதனை பார்க்க முடியும்)
உங்கள் தொலைபேசி அல்லது கணினியை பயன்படுத்தி கீழ்வரும் லிங்கை கொண்டு உங்கள் பதிவை ஆரம்பியுங்கள்..
கொடுக்கப்பட்டுள்ள register லிங்கில் கிளிக் செய்யவும்.. பின்வருமாறு ஒரு திரை தோன்றும்..அதில் register என்பதை கிளிக் செய்யவும்.. அதற்கு முன்னர் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்..
நீங்கள் கீழே உள்ள வீடியோவை play செய்து விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.. அல்லது அதற்கு கீழே ஒவ்வொரு படிமுறையும் தமிழ் மொழியில் எழுத்து வடிவமாக மற்றும் புகைப்பட வடிவமாக கொடுக்கப்பட்டுள்ளது..அதனை பார்த்தும் உங்களால் ரெஜிஸ்டர் செய்ய முடியும்
படிமுறை 2- உங்கள் திரையில் தகவல்களை ஒழுங்காக நிரப்பவும்..அடையாள அட்டை இலக்கத்தை நிரப்பிய பின்னர் உங்கள் கையில் தற்பொழுது இருக்கும் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து send OTP என்பதை அழுத்தவும்.உங்கள் . தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக ஒரு குறுஞ்செய்தி கிடைக்கும் .. குறுஞ்செய்தியில் ஒரு இலக்கம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும்..
அதனை மற்றைய பெட்டியில் நிரப்பி verify என்பதை அழுத்தவும்.. இலக்கம் சரியாக இருப்பின் அடுத்த படிமுறைக்கு செல்லலாம்..அடுத்ததாக உங்கள் முழு பெயரை நிரப்பிக் கொள்ளவும்.. நீங்கள் வசிக்கும் முகவரியை அடுத்ததாக நிரப்பிக் கொள்ளுங்கள்..
Next என்பதை அழுத்தவும்.. இப்பொழுது உங்களுக்கு தோன்றும் திரையில் வாகனம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும்.. உங்கள் வாகன பதிவிலக்கத்தை நிரப்பவும்..
உங்கள் வாகன chasis இலக்கத்தை நிரப்பவும்.. எந்த வாகனத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.உங்கள் வாகனத்துக்கு தேவையான எரிபொருள் டீசெல் அல்லது பெட்ரோல் ஆ என்பதை அழுத்தவும்..எல்லாவற்றுக்கும் இறுதியாக ரெஜிஸ்டர் என்பதை அழுத்தியவுடன் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இறுதியில் registration successful என தோன்றும்..
உங்களுக்கு ஒரு கருப்பு நிற QR CODE காண்பிக்கப்படும்..அதனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும்..
முக்கிய குறிப்புகள்..
QR CODE அவ்வாறு தோன்றாத பட்சத்தில் அல்லது registration fail என்று தோன்றினால் சிறிது நேரம் பொறுத்து இருக்கவும் .. ஏன் எனில் பலருக்கு registration fail தோன்றிய போதிலும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்து விட்டீர்கள் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. அவ்வாறு.. உங்களுக்கு கூட நடக்கலாம்..
சில மணி நேரம் காத்திருந்த பின்னும் உங்களுக்கு அப்படி ஒரு குறுஞ்செய்தி தோன்றவில்லை எனின் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்யவும்.. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கூட உங்கள் பதிவு வெற்றிகரம் அடையாமல் இருக்கலாம்..
சிலருக்கு வாகன chasis இலக்கம் தவறு என காட்டப்பட்டது.. எனினும் இலக்கம் சரியாக கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு காண்பிக்கப்பட்டது.
உங்களுக்கு ஒருவேளை அவ்வாறு நடந்தால் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்..
இந்த தேசிய எரிபொருள் டோக்கனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது அதனை பயன்படுத்தி எவ்வாறு இலகுவாக பெட்ரோல் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான விபரங்களை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்.- CLICK HERE