Open Competitive Examination for the Recruitment of Court Typist&stenographer Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2025
| DOWNLOAD GAZETTE(ENGLISH) | DOWNLOAD |
| APPLICATION | PENDING |
COURT INTERPRETER& TYPIST&STENOGRAPHER வழிகாட்டல் குழுவில் இணை(CLICK HERE)
நீதிமன்ற சேவையில் வெற்றிடங்கள் – 2025
நீதிமன்றத் தட்டச்சர் (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்)
- சேவை: நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவை (தரம் III)
- சம்பளம்: ரூ. 48,470 – 82,800 (MN 2-2025)
- வயது: 13.06.2025 அன்று 18 – 35 வயது வரை.
-
தகைமைகள்:
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில், கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதுடன், விண்ணப்பிக்கும் மொழிப் பாடம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழில்நுட்பக் கல்லூரி அல்லது அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனம் ஒன்றில், தட்டச்சுப் பாடநெறி அல்லது தட்டச்சு ஒரு பாடமாக உள்ள கணினிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
மொழித் தகைமை பற்றிய குறிப்பு:
- தட்டச்சர் (சிங்களம்) பதவிக்கு – சிங்கள மொழியில் திறமைச் சித்தி.
- தட்டச்சர் (தமிழ்) பதவிக்கு – தமிழ் மொழியில் திறமைச் சித்தி.
- தட்டச்சர் (ஆங்கிலம்) பதவிக்கு – ஆங்கில மொழியில் திறமைச் சித்தி.
நீதிமன்றச் சுருக்கெழுத்தாளர் (ஆங்கிலம்)
- சேவை: நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவை (தரம் III)
- சம்பளம்: ரூ. 48,470 – 82,800 (MN 2-2025)
- வயது: 13.06.2025 அன்று 18 – 35 வயது வரை.
-
தகைமைகள்:
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில், கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதுடன், ஆங்கில மொழிப் பாடம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழில்நுட்பக் கல்லூரி அல்லது அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனம் ஒன்றில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.