college of education interview process begins

college of education interview process begins

2019, 2020 உயர் தரப் பரீட்சைக்குழுவினரை கல்வியியல் கல்லூரிகளில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை (interview) ஜனவரி 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

2022.07.22 ஆம் திகதி கோரப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலின் படி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவர்களை உரிய பாடநெறிக்காகத் தேர்வுவதற்காகவே இந்த interview நடைபெறுகிறது.

இது தொடர்பான கடிதங்கள் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும் பணிகளை கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரிகள் கிளை, மற்றும் தொடர்புடைய கல்லூரிகள் ஆரம்பித்துள்ளன.

 12 ஆம் திகதி முதல் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாடநெறிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் வெவ்வேறு கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறும் வகையில் இம்முறையும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆண்டு என இரு குழுக்களை இம்முறை ஒரே முறையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது