JAPAN Job Opportunities For Srilankans
பயிற்சியுடன் வேலைவாய்ப்பு(05 வருட Work Permit visa FOR JAPAN)
வெளிநாட்டு வேலைவாய்ப்பினூடாக இலங்கை வாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சி பாடநெறியும், துறை சார் பாடநெறியும் ஆரம்பம்.
• வயது 18 – 35 இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் தங்கள் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
• பயிற்சிக் காலம்: 04 மாதம்
• பயிற்சிக் கட்டணம்: ஜப்பான் மொழி 12000.00
• துறை சார் பாடநெறி
- 1. முதியோர் பராமரித்தல் – 12500.00
- 2. ஹோட்டல் முகாமைத்துவம் – 14000,00
- 3. விவசாயம் – 15000.00
4 மாதமுடிவில் பயிற்சியில் சித்தியடைந்து ஜப்பான் சென்று வேலை செய்கின்றபோது அவர்களுக்கு 01 மாத சம்பளமாக இலங்கை ரூபா மதிப்பில் 400.000.00 ( நான்கு இலட்சம்) பெற்றுக்கொள்ளமுடியும். இவர்களுக்கு 05 வருட Work Permit visa வழங்கப்படும்.
• ஜப்பான் செல்வதற்கான முழுக்கட்டணம் 800,000.00 (எட்டு இலட்சம்) ரூபா தங்களால் செலுத்தப்படவேண்டும். தங்களால் இப் பெருந்தொகை பணம் செலுத்த முடியாமையினை உறுதிப்படுத்தபடுகின்றபோது, தங்களுக்காக முழுத்தொகை பணமும் உரிய நிறுவனத்தினால் செலுத்தி அனுப்பி வைக்கபட்டதன் பின்னர் தங்களது மாதாந்த சம்பளத்தில் 35,000.00 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் அறவிடப்படும்.
• Pass Port (கடவுச்சீட்டு வைத்திருத்தல் தங்களது பொறுப்பாகும்
• ஜப்பான் மொழி +துறை சார் பாடநெறி சித்தியடைதல் கட்டாயமாகும்