NEW UPDATE REGARDING GRAMA NILADHARI EXAMINATION 2023

NEW UPDATE REGARDING GRAMA NILADHARI EXAMINATION 2023

(UPDATED ON 07.01.2024)

நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற  2388 கிராம சேவகர்களை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரிட்சையின் முதல் கட்ட முடிவுகள் எதிர்வரும் அடுத்த 3 வாரங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் 2024 பிப்ரவரி மாதம் அளவில் அனைத்து கிராம சேவகர்ளுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் குறித்த போட்டி பரீட்சைக்கு அந்த பிரதேச செயலக பிரிவிலிருந்து தோற்றியோர்களின் எழுத்து பரிட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்கள் அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

குறித்த நேர்முகத் தேர்வில் பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகள் உடன்  ஏற்கனவே எழுத்து பரிட்சையில் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள்  உம் கூட்டப்பட்டு இறுதியாக வெற்றிடங்களுக்களுக்கு ஏற்ப சிறந்த புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்கள் கிராம சேவகர்களாக நியமிக்கப்படுவார்கள் 

.