Sooriyan Fm job opportunity 2023
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் இலங்கையின் முதல்தர வானொலி நிறுவனமான சூரியன் FM இல் புதிய குரல்களையும் புதிய திறமைகளையும் உள்வாங்கும் இலக்குடன் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும்?
வானொலித் துறையில் வேலை செய்யக்கூடிய ஆர்வமும், ஜனரஞ்சகமான குரல் வளமும், சிறந்த தமிழ் உச்சரிப்பும் உங்களுக்கு இருந்தால் உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
குறித்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
உங்கள் smartphone அல்லது சிறந்த mic ஒன்றை பாவித்து உங்கள் குரல் பதிவை (ஒரு அறிவிப்பாளர் போன்று அல்லது செய்தி வாசிப்பது போன்று) பதிவு செய்து கொள்ளுங்கள். முக்கியமாக பதிவு செய்யும் பொழுது உங்கள் குரல் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் எந்தவிதமான இரைச்சலும் இல்லாது பதிவு செய்யுங்கள்.
குறிப்பு – தமிழ் உச்சரிப்பை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நிமிட பதிவு போதுமானது.
பதிவு செய்து கொண்ட குரல் பதிவையும், உங்கள் சுய விபரக் கோவையையும் சூரியன் FM பின் உத்தியோகபூர்வ மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மின் அஞ்சல் முகவரி – sooriyanfm@asiabroadcasting.lk
ஊடகத் துறையில் சிறந்த வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.
*உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் நிச்சயம் பயன் பெறலாம்.*
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – join here