update- GRADE 5 SCHOLARSHIP RESULTS RELEASING DATE 2023

update- GRADE SCHOLARSHIP RESULTS RELEASING DATE

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக   அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

பரீட்சை முடிவுகள்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை DECEMBER 18 ஆம் திகதி நடைபெற்றது…

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.