இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக்கொள்ளல்
குறித்த உப புகையிரத நிலைய அதிபர் களை பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்கள் கீழ்வருமாறு.
குறித்த உப புகையிரத நிலைய அதிபர் கடமைகள் என்ன?
1.பிரவேச பத்திர விற்பனை நிலையத்துக்கு பொறுப்பாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரதிநிதிகள் அந்தந்த நிலையங்களில் நிறுத்தப்படும் புகையிரத ங்களுக்கு 24 மணி நேரமும் பிரவேச பத்திரம் விற்பனை செய்தல் வேண்டும்.
2.பொதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ளல் மற்றும் குறித்த பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தல் தினமும் ஒன்று சேரும் பணத்தை புகையிரத கணக்கு உத்தியோகத்தருக்கு அனுப்பி வைத்தல் நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்தல் அதேபோல புகையிரத முகாமையாளரின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒப்படைக்கப்படும் கடமைகளையும் செய்ய வேண்டும்.
குறித்த பதவிக்கான கொடுப்பனவை யாது?
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நிலையத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தரகு பணமும் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
ஒரு மாதத்தில் கிடைக்கும் தரகுப் பணம் பத்தாயிரம் ரூபாயை விட குறைவாக இருந்தால் பத்தாயிரம் ரூபா தரகு பணமாக கிடைக்கும். தரகுபணத்துக்கு மேலதிகமாக 5379 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
குறித்த பதவிக்கு யார் விண்ணப்பிக்க முடியும்?
விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட உப புகையிரத நிலையத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இதனை நம்பத்தகுந்த கடிதங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் உதாரணமாக கிராம சேவையாளர் இன் சான்றிதழ் பிரதேச செயலாளரின் சான்றிதழ் போன்றவற்றை குறிப்பிடலாம்.
விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருப்பதுடன் ஆண் விண்ணப்பதாரர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
உயரம் 5 அடி 4 அங்குல த்துக்கு குறையாமலும் நெஞ்சளவு 32 அங்குலத்துக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி சிறந்த கண் பார்வை உடையவராகவும் வைத்திய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது பின்பே தேர்ந்தெடுக்கப்படுவார்.
குறித்த பதவிக்கு தேவையான கல்வித் தகமை என்ன?
சாதாரண தர பரீட்சையில் மொழி பாடத்துடன் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் சிறப்பு சித்தியுடன் 6 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.
பதவிக்கு எந்த முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்?
புகையிரத முகாமையாளரின் மூலம் நடத்தப்படும் எழுத்துமூல போட்டிப் பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
பரீட்சை இரண்டு வினாத்தாள்களை கொண்டிருக்கும்.
1.மொழித் தேர்ச்சி
2.நுண்ணறிவு
குறித்த பரிட்சையில் 40 வீதமான புள்ளிகளை பெரும் பட்சத்தில் மாத்திரமே சித்தி அடைந்ததாக கருதப்படும்.
பரீட்சைக்கான கட்டணம் யாது?
சகல விண்ணப்பதாரர்களின் 500 ரூபாய் வரை கட்டணமாக புகையிரத பொது முகாமையாளர் என்னும் பெயருக்கு மக்கள் வங்கியின் நகர மத்திய கிளை கணக்கு இலக்கம்170100129027313 வரவில் விடப்பட வேண்டும். பற்றுச் சீட்டை விண்ணப்பப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். வேறு விதங்களில் பரீட்சைக் கட்டணம் செலுத்தல் முற்றாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப படிவம் எப்படி அனுப்பப்பட வேண்டும்?
A4 அளவுள்ள தட்டச்சு கடதாசியில் விண்ணப்பதாரிகள் மூலம் விண்ணப்பப் பத்திரம் தயாரிக்கப்பட வேண்டும்.(விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பப் பத்திரத்தை விட்டு அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் உப புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான விண்ணப்ப படிவம் என குறிப்பிடப்பட்டு
புகையிரத முகாமையாளர், தபால் பெட்டி இலக்கம் 355, புகையிரத முகாமையாளர் அலுவலகம் ,கொழும்பு 10
எனும் முகவரிக்கு 27.04.2021 இதற்கு முன்னதாக பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் வடிவத்தில் காணப்படும் விண்ணப்பதாரரின் கையொப்பத்தை அரசாங்க பாடசாலையின் அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளர் அல்லது சட்டத்தரணி அல்லது முப்படைகளின் அதிகாரம் பெற்ற ஒரு உத்தியோகத்தர் அல்லது பொலிஸ் சேவையில் குறிப்பிட்ட உயர் பதவியை வகிக்கும் உத்தியோகத்தர் அல்லது வருடத்திற்கு 237,060 இற்கு மேலதிகமாக சம்பளத்தை பெறும் அரசாங்க சேவையில் நிரந்தர பதவியை வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவரின் ஆல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறித்த பதவி தொடர்பான முழு விபரங்களை வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
GAZETTE WITH APPLICATION | DOWNLOAD |
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் – JOIN HERE
நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – JOIN HERE