The Bachelor of Business Administration (BBA) online Degree programme is delivered by Centre for Distance and Continuing Education (CDCE), University of Peradeniya and conducted in collaboration with the Faculty of Management , University of Peradeniya.
இலங்கை பேராதெனிய பல்கலைக் கழகத்தின் வியாபார நிர்வாகத்தின் இளங்கலை மானி வெளிவிவகார பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் கற்கைநெறி யாருக்கு பொருத்தமானதாக இருக்கும்?
உயர் தரத்தை முடித்துவிட்டு உங்கள் வேலை வாய்ப்புகளை வியாபார முகாமைத்துவம் அல்லது நிதி தொடர்பான துறையில் நீங்கள் உருவாக்கிக் கொள்ள விரும்பினால் இலங்கையின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான பேராதெனிய பல்கலைக் கழகத்தில் சிறந்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த கற்கைநெறி எந்த முறையில் கற்பிக்கப்படும்?
குறித்த பட்டப்படிப்புக்கான பாட நெறிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இதனால் நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே பகுதி நேரமாக இந்த கற்கை நெறியை கற்க முடியும். ஆங்கில மொழி மூலத்தில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான தகமை என்ன?
உயர்தரத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்து விட்டால் போதுமானது.
குறித்த கற்கை நெறியில் உள்ள உள்ளடங்கியுள்ள பாடப்பரப்பு விதானங்கள் யாவை?
குறித்த கற்கை நெறியை செய்யாமல் விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது?
இந்த கற்கைநெறி மூன்று வருட காலப் பகுதியைக் கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் உங்களால் கற்கை நெறியை விட்டு விலக கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. உதாரணமாக முதல் வருடத்தில் டிப்ளோமா சான்றிதழ் உடன் வெளியேற முடியும். இரண்டாம் வருடத்தை பூர்த்தி செய்தவுடன் higher டிப்ளோமா சான்றிதழ் உடன் வெளியேற முடியும். மூன்று வருடங்களையும் நீங்கள் பூர்த்தி செய்தால் BBA degree உடன் வெளியேற முடியும்.
குறித்த கற்கை நெறிக்கான கட்டணங்கள் யாவை?
முதல் வருடத்தில் 70,000 ரூபாய்
இரண்டாம் வருடத்தில் 80000 ரூபாய்
மூன்றாம் வருடத்தில் 100000 ரூபாய்
மொத்த கட்டணம்- 250000/=
எவ்வாறு விண்ணப்பிப்பது?
குறித்த கற்கை நெறிக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளமுடியும். ஒன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதனை print எடுத்துக்கொள்ள வேண்டும்.
(ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது)
விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் ஆயிரத்தி ஐநூறு பல்கலைக்கழகத்தின் மக்கள் வங்கி, பேராதனியா கிளைக்கு வரவு வைக்கப்பட வேண்டும்.
கணக்கு இலக்கம் – Current Account No. 057-1-001-4-1338036
Print எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்துடன்,குறித்த கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு, உறுதிப்படுத்தப்பட்ட உயர்தர பெறுபேறு சான்றிதழை இணைத்து குறித்த முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி
Assistant Registrar,
Centre for Distance and Continuing Education (CDCE),
University of Peradeniya,
Peradeniya
அனுப்பப்படும் விண்ணப்ப படிவத்தி ன் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கப்படும் கற்கை நெறி தொடர்பான விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான முடிவு திகதி – 20.05.2021(Deadline Extended Until : 20th May 2021)
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்க்- click to apply
கற்கை நெறி தொடர்பான முழுமையான விபரம் பல்கலைக்கழக இணைய தள முகவரியில் பார்வையிட முடியும் – click to view
வேலைவாய்ப்பு, கல்வி ,மற்றும் கற்கை நெறிகள் தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் உடனுக்குடன் நீங்கள் பெற்றுக் கொள்ள விரும்பினால் எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைய முடியும் – JOIN HERE