Court Typist Vacancies-Judicial service commission

Court Typist Vacancies-Judicial service commission

Court Typist Vacancies 2021: Open Competitive Examination for the Recruitment of Court Typist (Sinhala/Tamil/English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2021

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் கீழ்.நீதிமன்ற தட்டச்சு செய்பவர் தரம் 3 (தமிழ் /சிங்களம் /ஆங்கிலம்) – court typist பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகைமைகள் என்ன?

இலங்கையின் பிரஜையாக இருத்தல் வேண்டும்

வயது 18 தொடக்கம் 35 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல்.

தேவையான கல்வித் தகைமைகள்

சாதாரண தரத்தில் கணிதம், மொழி மூலம் ஆகியன உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி (உதாரணமாக நீங்கள் தமிழ் மொழி தட்டச்சு செய்பவர் பதவிக்கு விண்ணப்பித்தால் கட்டாயம் தமிழ் மொழியில் திறமைச் சித்தி அவசியம்)

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி அல்லது தேசிய இளைஞர் சேவை மன்றம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் ஊடாக typing course அல்லது typing பயிற்சி உள்ளடக்கப்பட்ட computer course (கணனி பயிற்சி நெறி) பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

குறித்த பதவிக்கான சம்பள விபரம்

குறித்த பதவி நிரந்தரமானதும் ஓய்வு ஊதியம் உடையதும் ஆகும்.

புதிதாக இணைக்கப்படும் நபர்கள் 3 வருட பயிற்சி காலத்தின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அதன் பின்னர் தடைதாண்டல் பரீட்சை ஒன்றில் எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் நிரந்தர நியமனத்தின் கீழ்  வேலை செய்ய முடியும்.(குறித்த வேலையை பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் தடைதாண்டல் பரீட்சை எதிர்கொள்ள வேண்டும்)

சம்பளம் 47790 ரூபாய் ஆகும்..

போட்டிப் பரீட்சையில் மொத்தமாக மூன்று வினாத்தாள்கள் அடங்கியிருக்கும்.

1.மொழித்திறன்

2.உளச்சார்பு

3.டைப்பிங்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

பரீட்சைக்கு உரிய விண்ணப்ப கட்டணம் 400 ரூபாய் மக்கள் வங்கியின் “secretary, judical service commission,” என்ற பெயரின் கீழ் கணக்கு இலக்கம் – 297100199025039 வரவு வைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் A4 அளவில் தயார் செய்யப்பட்டு முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.முக்கியமாக எந்த மொழி மூலத்தில் நீங்கள் விண்ணப்பிக்கிறார் களோ அதே மொழியில் விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரியின் கையொப்பம் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் அதிபர் அல்லது சமாதான நீதவான், அல்லது அரசு உதவி உயர் பதவி ஒன்றிலுள்ள உத்தியோகத்தர், அல்லது வழக்கறிஞர், அல்லது ராணுவ உயரதிகாரி /போலீஸ் உயர் அதிகாரி ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கட்டணம் செலுத்தப்பட்ட பற்றி சீட்டினை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து 10.05.2021 முன்னதாக

Secretary,
Judicial Service Commission Secretariat,
Colombo 12

என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள். அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் என குறிப்பிடுங்கள்.

TAMIL GAZETTEDOWNLOAD
APPLICATIONDOWNLOAD