Inspector of Works (Open) – Food Commissioner’s Department

உணவு ஆணையாளர் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவை பகுதியின் வேலை மேற்பார்வையாளர் பதவியின் தரம் 3 ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021

சம்பள விபரம் -57550 ரூபாய்

தேவையான கல்வித் தகைமைகள்

பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் திறமை சக்திகளுடன் விஞ்ஞானம் அல்லது கணிதத்துறை கூறிய மூன்று பாடங்களுடன் ஒரே அமர்வில் உயர்தரத்தில் சித்தி.

தமிழ் கணிதம் விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் சித்தி.

தேவையான தொழில் தகைமைகள் 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி அன்று 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

எழுத்துப் பரீட்சை இரண்டு வினாத் தாள்களை கொண்டது.

1. விடியம் சார்ந்த தொழில்நுட்ப பரீட்சை.

2. நுண்ணறிவு பரீட்சை.

விண்ணப்பங்களை ஏப்படி சமர்ப்பிக்க வேண்டும்?

A4 அளவிலான தாளை பயன்படுத்தி ஒன்று தொடக்கம் நான்கு வரையிலான பகுதிகளை முதல் பக்கத்திலும் 5க்கு பிறகு வரக்கூடிய பகுதிகளை அடுத்த பக்கத்தில் தயாரித்து பூரணப்படுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை தயாரிக்கும் போது அதன் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரீட்சையின் பெயரை தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறிப்பிடல் வேண்டும்.

பரீட்சைக் கட்டணம் ரூபாய் 750 ஆகும். உணவு ஆணையாளரின் பெயரில் இலங்கை வங்கியின் கணக்கு இலக்கம்

7042667

வரவு வைக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டை வராதவாறு விண்ணப்ப படிவத்தில் உரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.

சகல விண்ணப்பதாரிகளுக்கு கையொப்பத்தை அரச பாடசாலை ஒன்றின் அதிபர் அல்லது கிராம அலுவலர் அல்லது சமாதான நீதவான் அல்லது சத்தியப் பிரமான ஆணையாளர் அல்லது சட்டத்தரணி அல்லது பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது முப்படையை சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

உணவு ஆணையாளர்,உணவு ஆணையாளர் திணைக்களம்,,இலக்கம் 330,யூனியன் பிளேஸ்,

கொழும்பு 2

அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறித்த பதவியின் பெயர் தொடர்பான விவரத்தை குறிப்பிடவும்.

CLOSING DATE- 15.05.2021

GAZETTE DOWNLOAD
APPLICATIONDOWNLOAD