உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தற்போது வெளியான புதிய தகவல்..உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏற்கனவே சொல்லப்பட்டது போல இந்த மாத இறுதிக்குள் அதாவது 30 ஆம் திகதிக்குள் வெளியாகாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
வினாத்தாள்களை திருத்தும் பணிகள் முற்றாக நிறைவடைந்து விட்டாலும் புள்ளிகளை சரிபார்க்கும் பணிகள் மற்றும் இணையத்தில் பதிவேற்றம் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
.இந்தப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு இன்னும் ஒரு வாரம் அளவில் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..முழுமையான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் தேவைப்படுவதால் பரீட்சைப் பெறுபேறுகள் வழியாக தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே புது வருடத்துக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது..தற்பொழுது ஒரு வாரம் அளவில் தாமதமடையும் என உறுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது..
நேற்றைய தினம் இரவு 9 மணிக்கு பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளதாக சில வதந்தி யான தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது..