Diploma in Banking and Financial Studies- wayamba university

Today, the banking and financial sector is flourishing in our country and requires more employees and professionals to meet the demand. Having identified the expected qualities and competencies required for the financial sector, Department of Banking and Finance, the pioneer in banking and finance education provider in Sri Lanka has designed its external programmes to cope up with the challenge. The Department of Banking and Finance, proudly presents the Diploma in Banking and Financial Studies programme in line with the above objective.

இலங்கையைப் பொறுத்தவரையில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக வங்கி மற்றும் நிதித்துறை காணப்படுகின்றது..குறித்த துறையில் தேர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான வயம்ப பல்கலைக்கழகம் பொருளாதாரம் வங்கி மற்றும் நிதி ஆகியவற்றின் மேம்பட்ட துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்கும் நிர்வாகத் திறனும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் மாணவர்களை தயார் படுத்துவதற்கும் DBFS என்று சொல்லப்படுகின்ற diploma in in banking and financial studies என்ற கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது..

நாட்டில் தற்சமயம் காணப்படும் சூழ்நிலை காரணமாக ஆன்லைன் மூலமாகவே குறித்த கற்கை நெறியை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப் படுகின்றது..

குறித்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் என்ன?

1.உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி

    அல்லது

சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் 3 திறமைச் சித்தி களுடன் 6 பாடங்களில் சித்தி அத்துடன் வங்கி அல்லது நிதி சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றில் இரண்டு வருட அனுபவம்..

மேற்குறிப்பிட்ட தகமைகள் தவிர்ந்து மேலதிக தகமைகள்எதுவும் உங்களிடம் இருப்பின் அது தொடர்பாக வயம்ப பல்கலைக்கழகத்தின் செனட் குழு முடிவு செய்வார்கள்..

மற்றும்

அடிப்படை ஆங்கில அறிவு

குறிப்பு —- BBA(Bachelor of Buisness administration) கற்கைநெறியை ஆன்லைன் மூலமாக கற்க பெராதேனியா பலகலைகழகத்தில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..விண்ணப்பிக்க – APPLY

இந்தக் கற்கைநெறி எப்படிப்பட்டது?

இது ஒரு வருட காலத்தை கொண்ட டிப்ளோமா ஆகும்.. இரண்டு செமஸ்டர்களை கொண்டது.. குறித்த டிப்ளோமா slqf லெவல் மூன்றுக்கு சமமானது..

குறித்த கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் தொடர்ந்து higher diploma அதனைத் தொடர்ந்து குறித்த துறையில் external degree என்பவற்றை பூர்த்தி செய்து நீங்களும் பட்டதாரியாக முடியும்..

குறித்த கற்கைநெறி பின்வரும் பாடத்திட்டங்களை கொண்டிருக்கும்..

கற்கை நெறிக்கான கட்டணம் யாது?

விண்ணப்பிக்கும் பொழுது 1000 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்..

கற்கை நெறிக்கான மொத்த கட்டணம் 65,000 ரூபாய் ஆகும்.. ஆரம்பத்தில் பதிவு செய்யும் பொழுது 35,000 ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.. மிகுதி கட்டணம் இரண்டு தவணைகளில் திரும்ப செலுத்தப்பட முடியும்..

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இலங்கை வங்கியின் உங்கள் பிரதேசத்தில் உள்ள ஏதாவது ஒரு கிளையில் பின்வரும் கணக்கு இலக்கத்திற்கு 

மேற்குறிப்பிட்ட முழுமையான தகவல்களை பூர்த்தி செய்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு பற்றுச் சீட்டு பெற்றுக் கொள்ளுங்கள்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து

அதனுடன்

உங்கள் அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தின் போட்டோ கொப்பி

உங்கள் கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்களின் போட்டோ கொப்பி

உங்கள் பிறப்பு சான்றிதழின் போட்டோ கொப்பி

பாஸ்போர்ட் அளவில் எடுக்கப்பட்ட இரண்டு அண்மைக்கால புகைப்படங்கள்..

இறுதியாக அப்டேட் செய்யப்பட்ட உங்களின் சுயவிபரக்கோவை..

கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டின் போட்டோ கொப்பி..

என்பவற்றை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

Closing date of applications 15th May 2021

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய  – DOWNLOAD

கற்கைநெறி தொடர்பான முழு விபரங்களை பெற்றுக்கொள்ள VIEW