Calling applications for aptitute test for university admission 2020/2021 from ramanathan academy of finae arts,university of jaffna.
உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test) – இராமநாதன் நுண்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைக்கழகம்
பல்கலைக்கழக அனுமதி–2020/2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ராமநாதன் நுண்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக அனுமதிக்கானஉளச்சார்பு பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பம் கோரப்பட்டு உள்ள COURSES
நுண்கலை மானி கர்நாடக சங்கீதம்(Bachelor of Fine Arts (Honors) in Music)
நுண்கலை மானி நடனம்(Bachelor of Fine Arts (Honors) in Bharathanatiyam)
நுண்கலைமானி சித்திரமும் வடிவமைப்பும்(Bachelor of Fine Arts (Honors) in Art & Design)
மேற்படி 4 வருட பட்டப்படிப்பு கற்கை நெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.05.2021 இதற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான தகைமைகள்
மேற்குறிப்பிட்ட கர்நாடக சங்கீதம் நடனம் மற்றும் சித்திரமும் வடிவமைப்பு ஆகிய கற்கைநெறியில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தெரிவு செய்வதற்கு 2020 நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் அதேபோல நீங்கள் தெரிவு செய்ய விரும்பும் பாடநெறிக்குறிய பாடத்தில் அதாவது கர்நாடக சங்கீதம் அல்லது நடனம் அல்லது சித்திரக்கலை ஆகியவற்றில் ஆகக்குறைந்தது திறமை சித்தியுடன்(C) மற்றைய இரண்டு பாடங்களில் சாதாரண சித்தி (S)பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்காண ஆகக்குறைந்த தகைமை அவசியம்.
மேற்குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும்.
கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் ஆகியவற்றுக்கு ஆற்றுகை பரீட்சை உம் சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறிக்கு செய்முறை மற்றும் எழுத்துப் பரீட்சை என்பன நடைபெறும்.
விண்ணப்பங்களை எப்படி சமர்ப்பிப்பது?
விண்ணப்பங்களை ஆன்லைன் ஊடாக முழுமையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் குறித்த விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து print எடுத்து உங்கள் கையொப்பத்தை இட்டு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். .
28ஆம் திகதி மே மாதம் 2021 பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
ONLINE APPLICATION LINK – APPLY
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையான மற்றைய ஆவணங்கள் பின்வருமாறு..
1.உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் பத்திரத்தின் போட்டோ பிரதி (உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்தில் டவுன்லோட் செய்ய முடியும்…இதுவரை நீங்கள் டவுன்லோட் செய்ய வில்லை எனில் இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD RESULTS SHEET )
குறிப்பு – டவுன்லோட் செய்யப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறு பத்திரம் பாடசாலை அதிபரால் அல்லது சமாதான நீதவான் ஆல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
2. உளச்சார்பு பரீட்சை காண கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.(upload செய்யப்பட வேண்டும்)
நுழைவு பரீட்சைக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் மற்றும் வங்கி கணக்கு விபரம்…
கட்டணவிபரம்
இல | கற்கைநெறி | மக்கள் வங்கிக் கணக்கிலக்கம் | விண்ணப்பக் கட்டணம் |
1 | கர்நாடகசங்கீதம் | 040002400001622 | 500.00 |
2 | நடனம்- பரதம் | 040002400001630 | 500.00 |
3 | சித்திரமும் வடிவமைப்பும் | 040002400001648 | 1,300.00 |
உளச்சார்பு பரீட்சை காண தகைமையை பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் அவர்களால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
முழுமையாக ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுதிப்படுத்தப்பட்ட உயர்தர சான்றிதழின் போட்டோ பிரதி(scan copy) , செலுத்தப்பட்ட கட்டணச் சீட்டு (scan copy) என்பவற்றை விண்ணப்ப படிவத்தின் இறுதியாக உள்ள இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
பின்னர் முழு விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து உங்கள் கையொப்பத்தை இட்டு அதனுடன் உறுதிப்படுத்தப்பட்ட உயர் தர சான்றிதழ் பிரதி, செலுத்தப்பட்ட கட்டண பற்றுச் சீட்டு என்பவற்றை இணைத்து கடித உறையில் வைத்து..
உதவிப் பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கைநெறியை குறிப்பிட்டு பதிவு தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொலைபேசி எண்- 021 222 6714, மின்னஞ்சல் முகவரி- ar.admissions@yahoo.com மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
OFFICIAL WEBSITE LINK – VIEW