HEALTH SYSTEM ENHANCEMENT PROJECT FUNDED BY ASIAN DEVELOPMENT BANK
Through Asian Development Bank funded Health System Enhancement Project, is proposed to carry
out reforms of the Primary Health Care Services proposed by the Primary Health Care Policy in
Central, North Central, Sabaragamuwa and Uva Provinces.
சாதாரணதர தகைமை உடன் சுகாதார அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் உட்பட மூன்று வகையான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்பின் கீழ் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டு செயற்திட்டத்தில் பின்வரும் மூன்று பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. முகாமைத்துவ உதவியாளர்
தகைமை – சாதாரண தர பரீட்சை கணிதம் மற்றும் மொழி பாடத்தில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.
அடிப்படை கணினி தொடர்பான அறிவு மற்றும் அடிப்படை அரசாங்க நடைமுறைகள் தொடர்பான அறிவு.
வேலை தொடர்பான அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் உயர்தரத்தில் சித்தி அடைந்து இருத்தல் மேலதிக தகைமை ஆக கருதப்படும்.
2.procurement officer
குறித்த துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் மற்றும் இரண்டு வருட வேலை அனுபவம்.
3.Finance officer
குறித்த துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் மற்றும் ஐந்து வருடம் வேலை அனுபவம்
குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 64 வயதை விட குறைவாக இருத்தல் வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் எடுத்து முழுமையாக பூரணப்படுத்தி,உங்கள் கல்வி மற்றும் வேலை அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகளை இனைத்து 04.06.2021 இதற்கு முன்னர்
Project Director
Health System Enhancement Project
3/19, Kynsey Road, Colombo 08
என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள் கடித உறையின் இடதுபக்க மேல் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிடவும்.
அல்லது
நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமை காரணமாக பதிவு தபால் மூலம் அனுப்ப முடியாத வர்கள் ஈமெயில் முகவரி அல்லது fax மூலமும் அனுப்ப முடியும்.
EMAIL முகவரி – pmu@hsep.lk
Fax இலக்கம் – +94 11 2 697 163
தொலைபேசி இலக்கம்- +94 11 2 697 173
விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD