Bachelor of software engineering-Open university of Srilanka(ousl)

The open university of Srilanka calling applications for a Bachelor of software engineering honours degree in collaboration with Srilanka association for software services companies.

பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்(ஆன்லைன் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கபட்டுள்ளது.)

இம்முறை உயர்தரப் பெறுபேறுகள்  வெளியான மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டும் ஏற்கனவே பல்வேறு காரணங்களினால் விண்ணப்பிக்க முடியாமல் தவறவிட்டவர்களுக்காகவும் மீண்டும் மே 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது..

 விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் மூலமான தெரிவு பரீட்சை மே மாதம் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறும்..

முக்கிய குறிப்பு – 

ஏற்கனவே முதல் சுற்றில் தெரிவு பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு கான registration process மே 13 முதல் 23 வரை மேற்கொள்ள முடியும். இது தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு மே மாதம் 11ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையும் மற்றும் மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையும் zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி information session நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..zoom meeting லிங்க் விரைவில் வழங்கப்படும்.

கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Science, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில் துணை வேந்தர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளது. இதனை இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி MAY மாதம்12to May 23 நிறைவடைகின்றது. இதனை அடுத்த ஜூன் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உயர் தரத்தில் சித்தி இருந்தால் மட்டும் போதும்.சித்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை ..நுழைவுத்தேர்வில் சித்தி பெற வேண்டும் .colombo சென்று படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை . நாடு முழுவதும் அமைந்துள்ள ஒன்பது பிராந்திய நிலையங்களிலும் 19 கற்கை மையங்களிலும் பட்டப் படிப்பைத் தொடரலாம். இலவசமான கற்கை நெறிக்கான கடன் வசதியும்,மடிக்கணினியை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வசதியும் உங்களுக்கு வழங்கப்படும்.

*தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் *bachelor of software engineering honours degree* கற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

அல்லது உயர் தரத்திற்கு சமமான ஏதேனும் தகைமை இருந்தால் போதுமானது.

நீங்களும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரியாக விரும்பினால் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்

ONLINE APPLICATIONAPPLY

OFFICIAL WEBSITE LINK VIEW

விண்ணப்பம் கோரப்பட உள்ள நாட்டில் நிலவும் 2500 கிராம சேவகர்கள். வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை அறிய –