Islandwide training centres of the National Youth Corps (NYC) will recruit youth for its 3-month course for students who sat for the G.C.E.Ordinary Level exam in 2020. This training will be on soft skills development and will be a non-residential full-time training.
இலங்கை அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தேசிய இளைஞர் படையணி அதாவது National youth corps இனால் தற்பொழுது சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்துவிட்டு பரீட்சை பெறுபேறு காக காத்திருக்கும் மாணவர்களுக்காக மூன்று மாத கற்கைநெறி ஒன்றை கற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆங்கில பாடநெறியை அல்லது தகவல் தொழில் நுட்ப கற்கை நெறியை கற்று சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக இந்த கற்கை நெறியை கற்றுக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதைக் கற்பதால் எனக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
இந்தப் பயிற்சி நெறி மூன்று மாத காலத்தை கொண்டது. இதை கற்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள்.
1.இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.
2. கலை மற்றும் இசைத் துறையில் வாய்ப்புகள்
3. இதைப் பூர்த்தி செய்வதை தொடர்ந்து vocational training என அழைக்கப்படும் தொழிற் பயிற்சி நெறியை தொடர்வதற்கான சந்தர்ப்பம்.
4. குறித்த பயிற்சி நெறியில் தேர்ந்தெடுக்கப்பட்ட batch இற்கு முழுமையான புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படும்.
குறித்த பாடநெறி எவ்வாறு விண்ணப்பிப்பது?
தேசிய இளைஞர் படையணியின் பயிற்சி பாடநெறி இடம்பெறும் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. உங்கள் மாவட்டத்துக்கு உரிய பயிற்சி நிலையத்தை தெரிவுசெய்து குறித்த நிலையத்திற்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அதற்கான தொலைபேசி இலக்கங்கள் வர்த்தமானி அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடங்கள் யாவை?
ஆங்கில மொழி பயிற்சி
தமிழ்மொழிப் பயிற்சி
தகவல் தொழில்நுட்பம்
தலைமைத்துவ பயிற்சி
அழகிய கலை கல்வி
அணி நடை பயிற்சி
சவால்கள் மிக்க செயற்பாட்டு பயிற்சி
தொழில் வழிகாட்டல் மற்றும் ஆளுமை விருத்தி
மேலதிக விபரங்களுக்கு நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்
011268885
மின்னஞ்சல் முகவரி – application@youthcorps.lk
இணையதள முகவரி Www.youthcorps.lk
தலைமை அலுவலகம் அமைந்துள்ள முகவரி
இலக்கம் 420 ,பௌத்த லோகா மாவத்தை ,கொழும்பு 07
பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி என்ன?
29.03.2021
குறித்த பயிற்சி நெறிக்கான வர்த்தமானி அறிவித்தலை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – download
விண்ணப்பபடிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்– download
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் – click here