Aswesuma Welfare Scheme: Beneficiary Information Update 2026

Aswesuma Welfare Scheme: Beneficiary Information Update 2026

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம்

தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைக் கோருதல்

அஸ்வெசும II ஆம் கட்டம் – தகுதியுடையோரின் இரண்டாவது பெயர் பட்டியல் – 2026

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காகத் தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் அந்தப் பட்டியலில் உள்ள பெயர்கள் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோருவதற்கான தொடர்புடைய உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவாகும்.
தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல்
  • அஸ்வெசும நலன்புரிப் பயன் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதியுடையோரின் இரண்டாவது பெயர் பட்டியல், தற்போது நாடு பூராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • தகுதியுடையோரின் இந்தப் பெயர் பட்டியலை நலன்புரிப் பயன்கள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாகவும் பார்வையிடலாம்.கீழே லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது
மேன்முறையீடு / ஆட்சேபனைகளை கோருதல்
  • வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பெயர் பட்டியலின் பிரகாரம் தகுதி பெறாதவர்கள் அல்லது தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள வகைப்பாடு (Category) குறித்து திருப்தியடையாத குடும்பங்கள் / நபர்கள் மேன்முறையீடு செய்யலாம்.
  • பெயர் பட்டியலில் அஸ்வெசும பயன்களைப் பெறுவதற்கு தகுதியற்ற குடும்பங்கள் அல்லது நபர்கள் இருப்பார்களாயின் பொதுமக்கள் அது தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.