BOC TRAINEE STAFF ASSISTANT

Bank of ceylon Calling applications online for the post of Trainee Staff Assistant 2021

இலங்கை வங்கியின் பதவிநிலை உதவியாளர் பயிலுணர்  பதவிக்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டு இருந்தது..

குறித்த பதவிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…எனினும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான இலங்கை வங்கியால் வழங்கப்பட்ட லிங்க் பலருக்கு வேலை செய்யவில்லை..

இதற்கான காரணம் யாதெனில் விண்ணப்பங்களை நிரப்புவதற்காக வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் படிவத்தில் கணனி திரையை பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் விண்ணப்பிக்க பயன்படுத்துகின்ற கணணியின் திரையை 1024*768 என்ற resolution setting ககு மாற்றிய பின்னர் உங்களால் விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும்…இதனை display setting என்ற ஆப்ஷன் இணை பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும்…

குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான படிமுறைகளை ஒவ்வொன்றாக கீழே கொடுத்துள்ளோம்.இதனைப் பயன்படுத்தி முழுமையாக உங்கள் விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலமாக உங்களால் நிரப்பக் கூடியதாக இருக்கும்.

முதலில் உங்கள் கணனியின் திரை resolution 1024*768 என்ற setting இல் உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..  இல்லாவிட்டால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

உறுதிப்படுத்திய பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாரு பக்கம் தோன்றும்.. குறித்த திரையில் உள்ள more info இல் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.. தேவைப்பட்டால் மாத்திரம் வாசித்துக் கொள்ளுங்கள்..

வலது பக்கத்தில் for registration என்பதற்கு கீழ் signup என கொடுக்கப்பட்டுள்ளது.. அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்..

கிளிக் செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாறு அடுத்த திரையில் தோன்றும்.. இதில் உங்கள் விபரங்களை முழுமையாக கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.. முக்கியமாக தற்பொழுது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.. முழுமையாக நிரப்பிய பின்னர் register என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்..

அதன் பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப பட்டு இருக்கும்..குறித்து குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு லிங்கை கிளிக் செய்து activate செய்து கொள்ளுங்கள்..

ஆக்டிவேட் செய்தவுடன் login செய்வதற்கான திரை கீழ் உள்ளவாறு தோன்றும்..அதில் நீங்கள் ஏற்கனவே கொடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு என்பவற்றை கொடுத்து உள்நுழையுங்கள்.

உள்ளே நுழைந்தவுடன் கீழ் காட்டப்பட்டுள்ள வாறு ஒரு திரை தோன்றும்.. குறித்த திரையில் click here to apply என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்துக்கு உள்  நுழையுங்கள்..

அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வாறு ஒரு திரை தோன்றும்..அதில் add என்பதை கிளிக் செய்து

அதற்கு அடுத்ததாக தோன்றும் திரையில் trainee staff assistant இணை select செய்து apply என்பதை கொடுங்கள்..

இறுதியாக உங்களுக்கு விண்ணப்பம் தோன்றும்.. இதில் 5 பிரிவுகளில் நிரப்ப வேண்டி இருக்கும். ஒவ்வொரு பிரிவையும் முழுமையாக நிரப்பிய பின்னர் save என்பதை கொடுத்து அடுத்த பிரிவுக்கு நுழைந்து கொள்ளுங்கள்.. 

குறித்த விண்ணப்ப படிவத்தை எப்படி சரியான முறையில் நிரப்புவது என்பதற்கான ஆங்கில் காணொளி வடிவம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளோம்.. அதனையும் முழுமையாக பார்த்த பின்னர் விண்ணப்பத்தை நிரப்பி கொள்ளுங்கள்..

QUALIFICATION

விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவுத் திகதி 24 வயது அல்லது அதற்கு குறைவான வயதை கொண்டிருத்தல் வேண்டும்.

சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ் கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்களாக 5 பாடங்களில் திறமை சித்திகளும் மொத்தமாக சேர்த்து 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

உயர்தர பரீட்சையில் ஒரே அமர்வில் பிரதான் மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருக்கவேண்டும்..

மேலதிகமாக அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சியுடன் வேலை செய்யும் திறன் மற்றும் மற்றவர்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய திறன் என்பவற்றை கொண்டிருத்தல் 

 பயிற்சி காலமாக இரண்டு ஆண்டுகளை செய்ய வேண்டி இருக்கும்.. முதலாவது ஆண்டில் மாதாந்த கொடுப்பனவாக 45,000 ரூபாய் உம் அடுத்த ஆண்டு முதல் 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்

.

பயிற்சிக் காலத்தின் போது வங்கி திருப்தி அடையும் வகையில் வேலை செய்பவர்கள் பதவிநிலை உதவியாளர் தரம் ஒன்று என்ற பதவிக்கு உயர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரிகள் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.. போட்டிப் பரீட்சையில் இரண்டு விதமான வினாத்தாள்கள் இருக்கும்.

வினாத்தாள் 1 – பொது அறிவு நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

வினாத்தாள் 2- ஆங்கில மொழி.

விண்ணப்பிக்கும் முறை

இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.. வேறு எந்த முறைகளின் ஊடாகவும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது..

நாளை முதல் அதாவது 18ஆம் திகதி ஜூலை மாதம் 2021 முதல் 31ஆம் திகதி ஜூலை மாதம் 2021 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும்..

எனவே 18.07.2021 முதல் மேலே கொடுக்கப்பட்ட வேலை செய்யும்.. குறித்த லிங் மூலம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை எவ்வாறு நிரப்புவது என்பன தொடர்பான விபரங்கள் நாளை நமது வாட்ஸ்அப் குழுமம் மற்றும் இணைய தளத்தில் பகிரப்படும்..

விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை இலங்கை வங்கி வெளியிட்டுள்ளது அது பின்வருமாறு..

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது கணினியை பயன்படுத்தி விண்ணப்பிப்பது சிறப்பானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

விண்ணப்ப படிவத்தில் personal ,qualification and general ஆகிய பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்..

Experience and achievements ஆகிய பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய அவசியம் கிடையாது..

உங்கள் தகமைகள் தொடர்பான விபரங்களில் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதும்..பட்டம் மற்றும் அதற்கு மேல் அதிகமான தகைமைகள் தொடர்பாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.