HOW TO APPLY FOR BASIC ENGLISH COURSE
நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்.
வகுப்புகள் நடைபெறும் நாட்கள் : திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (வாரத்திற்கு மூன்று வகுப்புகளிலும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்)
நேரம்: மாலை 4:00 – 6:00 (ஒவ்வொரு நாளும்)
கால வரையறை : 2 மாதங்கள்
1. இப்பாடத்திட்டம் ZOOM செயலி மூலம் நிகழ்வதால் இச்செயலி உங்கள் கணினியில் அல்லது கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
2. பங்குபற்றுனர்கள் கீழ்காண்பவைகளை உடையவர்களாக இருத்தல் அவசியம் :
• ZOOM செயலி
• சீரான இணைய இணைப்பு
• கைப்பேசி அல்லது கணினி அல்லது TAB (வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் வகையில்)
• WhatsApp (கட்டாயமல்ல)
3. இக்கற்கைக்கான சான்றிதழைப் பெற பின்வரும் நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படும்:
• 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு வரவு
• 1௦௦% வகுப்பு வேலை/ஒப்படை பூர்த்தி செய்தல்
• ஒப்படைகள்/பரீட்சை சமர்ப்பித்தல்
4. உங்கள் விண்ணப்பபடிவம் எங்களால் பெறப்பட்ட பின், நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ஒரு தகுதி தேர்வுக்கு உட்படுத்தப் படுவீர்கள். அந்தத் தேர்வு முடிவின் பின்னர் உங்கள் தெரிவு பற்றிய முடிவு எடுக்கப்படும்
5. பெருமளவு விண்ணப்பங்கள் பெறப்படுவதால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள்