POST OF TRAINEE BANK ASSOCIATE- Hatton National bank

You will be given a training period of two years, during which you will be exposed to various areas of Banking. As a Trainee Bank Associate, you will be expected to demonstrate a very positive and high aptitude in your work.

closing date -13.05.2021

உயர்தரம் முடித்தவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்..

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நஷனல்(HATTON NATIONAL BANK) வங்கியில் நாடு முழுவதும் Trainee banking associate பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது எல்லை 18 தொடக்கம் 25 ஆகும்.

தேவையான கல்வித் தகைமைகள் என்ன?

சாதாரண தரத்தில் ஆகக் குறைந்தது மூன்று பாடங்களில் ஆவது திறமைச் சித்தி இருத்தல்.. கணிதம் அல்லது ஆங்கில பாடத்தில் திறமை சித்தியை விட குறைவான சித்தி இருக்கக் கூடாது.– (

உயர் தரத்தில் ஒரு ஒரு திறமை சித்தியுடன் இரண்டு சாதாரண சித்திகளையும் கொண்டிருத்தல்..

முன் வேலை அனுபவம் அல்லது வங்கியில் internship செய்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் கட்டாயம் கிடையாது..

கணினி தொடர்பான அடிப்படை அறிவு இருத்தல் சிறந்தது..(ms office).

சிறந்த தொடர்பாடல் திறமை.

சிறந்த சம்பளத்துடன் இரண்டு வருடங்களுக்கு training அடிப்படையில் வேலை செய்ய வேண்டும்.. அதன் பின்னர் banking asaociate ஆக தரம் உயர்த்தப்படும்..

குறித்த வேலைவாய்ப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

குறித்த வேலைக்கு hnb வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்..

விண்ணப்பிக்கும் லிங்க் – APPLY

ஆன் லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு படி முறையாக கீழே கொடுத்து உள்ளோம்..( விண்ணப்பிப்பவர்கள் முடிந்தவரை கணினியை பயன்படுத்தி விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும்)

விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் கீழே உள்ளவாறு ஒரு திரை உங்களுக்கு தோன்றும்.. இதில் login to apply என கொடுக்கப்பட்டுள்ளது. அதை முதலில் கிளிக் செய்யவும்..

click செய்த பின் உங்களுக்கு login செய்வதற்கான திரை தோன்றும்.register செய்யாமல் login செய்ய முடியாது ..

கீழே உள்ள REGISTER என்பதை கிளிக் செய்து கேட்கப்படும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யுங்கள்..(கொடுக்கப்படும் பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்)

Register செய்த பின் மீண்டும் login திரை தோன்றும் 

குறித்த திரையில் உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை மற்றும் ஏற்கனவே கொடுத்த password என்பவற்றை கொடுத்து உள்நுழையவும்..

உள் நுழைந்த பின் உங்களது சுயவிபரங்கள் (பெயர், முகவரி,)மற்றும் கல்வித் தகைமைகள் தொடர்பான விபரங்கள் கேட்கப்படும்..

(உங்களுடைய முகம் நன்றாக தெரியக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அப்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.)

கீழே உங்கள் மொழி அறிவு தொடர்பான தகைமை கேட்கப்பட்டிருக்கும்..அதில் மூன்று மொழிகளிலும் உங்கள் புலமைத்துவ ம் பற்றிய சரியான தெரிவுகளை கொடுக்கவும்.

செய்தபின் இன்னும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு save and continue  கொடுத்து அடுத்த பக்கத்தைப் உள்நுழையவும்.. அடுத்த பக்கத்தில் நீங்கள் உயர் தரத்திற்கு மேலதிகமாக ஏதேனும் டிப்ளோமா அல்லது certificate அல்லது degree. செய்திருந்தால் அது தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. அவற்றை நிரப்பவும்.. விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன் add என்பதை கிளிக் செய்யவும்..(ஒன்றுக்கு மேற்பட்ட தகைமைகள் இருப்பின் ஒவ்வொன்றாக புதிதாக நிரப்பி மீண்டும் மீண்டும் add செய்யவும்.)

அடுத்ததாக கல்விக்கு மேலதிகமாக நீங்கள் விளையாட்டுகளில் அல்லது ஏதேனும் அழகியல் கலைகளில் அல்லது உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏதும் போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் அது தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்து add செய்து கொள்ளவும்..

அடுத்ததாக உங்கள் உறவினர் அல்லாத இரண்டு பரிந்துரை யாளர்களின் விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. உயர் பதவிகளில் உள்ள யாரேனும் இருவரை பெயர், தொழில் மற்றும் அவர்களது தொடர்பு விபரங்கள் போன்றவற்றை கொடுத்து add செய்து கொள்ளவும்..

அடுத்ததாக இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும் நிறுவனத்தில் அல்லது வங்கியில் வேலை செய்திருந்தால் அது தொடர்பான விபரம் கேட்கப்பட்டிருக்கும். (குறித்த விபரங்கள் இருப்பின் add செய்த பின்னர்..).

 Save and continue என்பதை கொடுக்கவும்.

save கொடுத்த பின்னர் உங்கள் தகவல்கள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஒரு திரை தோன்றும்.. குறித்த திரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று காணப்படும்…