POST OF TRAINEE SECRETARIAL ASSISTANT- BANK OF CEYLON

The Bank of Ceylon premier state owned commercial bank ranked among the top 1000 global banks, top 500 largest banks in the Asia Pacific Region and No.1 in Sri Lanka, is looking for suitably qualified, experienced, dynamic and results oriented persons to fill the vacancies for the following position: TRAINEE SECRETARIAL ASSISTANT.


இலங்கை வங்கியில் பயிலுனர் செயலாளர் உதவியாளர் பதவிக்கான வெற்றிடம்..

உலகளாவிய அதிசிறந்த ஆயிரம் வங்கிகளில் ஒன்றாகவும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 500 வங்கிகளில் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்ட அரச வர்த்தக வங்கியும் இலங்கையின் முதல்தர வங்கியான இலங்கை வங்கியில் பயிலுனர் செயலாளர் உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

தேவையான தகைமைகள்

இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்

சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் ஆங்கில பாடம் உட்பட மூன்று பாடங்களில் திறமை சித்திகளுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி

உயர்தரத்தில் ஒரே அமர்வில் இரண்டு பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..

மற்றும்

மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவால் பதியப்பட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றிடம் இருந்து செயலாளர் உதவியாளர் சேவையில் குறைந்தது ஆறு மாத டிப்ளமோ அல்லது சான்றிதழ் கற்கை நெறியை நிறைவு செய்திருத்தல்..

விண்ணப்ப முடிவுத் திகதி இல் 40 வயது அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேலதிக தகைமைகள்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த அறிவு

முன்னணி அடிப்படை அறிவு

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை.(40 words per minute)

பயிற்சி காலம் இரண்டு வருடங்கள் ஆகும் பயிற்சிக் காலத்தின் போது மாதாந்த கொடுப்பனவாக முதல் வருடம் 25,000 ரூபாயும் இரண்டாம் வருடம் 28 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..

அதன் பின்னர் உங்கள் திறமையின் அடிப்படையில் செயலாளர் உதவியாளர் தரம் ஒன்று என்ற தரத்திற்கு நிரந்தர உரித்துடையவர் ஆக மாற முடியும்.

தெரிவு செய்யப்படும் முறை

கணினி தட்டச்சு வேக பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் நேர்முகப்பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

2021 ஜூன் மாதம் 5ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான லிங்க் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் –

விண்ணப்பிக்கும்  லிங்க் – ONLINE APPLICATION

(முக்கிய குறிப்பு- சில நேரங்களில் லிங்க் வேலை செய்வதற்கு சிறிது காலம் எடுக்கலாம்..எனவே லிங் வேலை செய்யாவிட்டால் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்.விண்ணப்பிப்பவர்கள் முடிந்தவரை கணினியை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.)

விண்ணப்பிப்பதற்கு முன் வாசிக்க வேண்டிய முக்கியமான instructionsRead

விளம்பர அறிவித்தல்|Paper advertisement

TAMIL – VIEW

ENGLISH – VIEW

SINHALA – VIEW