University of kelaniya calling applications for aptitute examination 2020/2021
CLOSINF DATE EXTENDED TO 18.06.2021
இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு ஆறு கற்கை நெறிகளுக்கு உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
குறித்த கற்கை நெறிகள் கீழ்வருமாறு..
BSc Honours in Information Technology / Management and Information Technology
BBMgt Honours in Financial Engineering
BA Honours in Translation Studies
BSc Honours in Sports Science
BA Honours in Film and Television
BSc Honours in Speech and Hearing Science
குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகைமைகள் தொடர்பான விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டிக நூலின் மூலமாக அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF மூலமாக உங்களால் அறிந்துகொள்ள முடியும்..
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் இலங்கையில் உள்ள மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் மூலமாக
055-1001-30667553
என்ற கணக்கு இலக்கத்திற்கு 1000 ரூபா வரவாகும் வகையில் செலுத்தி பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டின் மென் பிரதியுடன் ஆன்லைன் முறை ஊடாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் போது தற்பொழுது செயற்பாடு நிலையிலுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துதல் கட்டாயம் ஆகும்
இதற்கு மேலதிகமாக உங்கள் தேசிய அடையாள அட்டையின் இரு பக்கங்களிலும் தெளிவான படத்தையும் மற்றும் இரண்டு வாரங்களுக்குள் எடுத்துக்கொண்ட தெளிவான உங்களின் மேற்பகுதி புகைப்படம் ஒன்றையும் தரவேற்றம் செய்தல் வேண்டும்.
மேற்படி ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தில் உங்களது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டால் அந்தப் பெயர்களில் குறிப்பிடப்படும் ஒருவர் தான் நீங்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சத்தியக்கடதாசி ஒன்றை குறித்த ஆவணங்கள் உடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
உங்களுக்கான அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது அது மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அதனுடைய அச்சுப் பிரதி ஒன்றை நீங்கள் பரிட்சைக்கு வரும்பொழுது கொண்டு வருதல் வேண்டும் அந்த அனுமதிப் பத்திரத்தில் அரசாங்க பாடசாலையின் அதிபர் அல்லது கிராம சேவையாளர் அல்லது பல்கலைக்கழக பேராசிரியர் அல்லது சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி அல்லது நொத்தாரிசு அல்லது பொலீஸ் அல்லது முப்படைகள் அதிகாரம் வாய்ந்த உத்தியோகத்தர் அல்லது உயர் பதவிகளை வகிக்கும் அரசாங்க உத்தியோகத்தர் அல்லது மதகுரு போன்றவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட இருக்க வேண்டும்.