SCHOOLS OPENING DATE FOR GCE A/L & O/L

sri-lanka-government-state-logo

SCHOOLS OPENING DATE FOR GCE A/L & O/L

சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டிய திகதி தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது..

வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நவம்பர் 11 திகதி முதல் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்துக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துடன் சாதாரணதர மற்றும் உயர்தர  பிரத்தியேக வகுப்புகளை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது..

ஒரு வகுப்புக்கான கொள்ளளவில் 50 வீதமானவர்கள் உள்ளடக்கியவாறு மட்டுமே வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே ஆரம்பப்பிரிவு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவின் அனுமதி கிடைத்ததும் தரம் 6-9 வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். மீதமுள்ள நாட்களைக் கருத்திற் கொண்டு பாடவிதான நிறைவு மற்றும் பரீட்சைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2022 ஆரம்பப் பகுதியில் நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..