Introduction to GS Examination 2021

Introduction to GS Examination 2021

நாடு முழுவதும் நிலவுகின்ற 2000 கிராம சேவகர் வெற்றிடங்களுக்கு கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் வெளியாகியிருந்த வர்த்தமானி ஊடாக உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சின் ஊடாக கோரப்பட்டு இருந்தது.

எனினும் குறித்த பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் விண்ணப்பதாரிகள் மத்தியில் நிலவுகின்றது.. சிறந்த முறையில் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கும், பரிட்சையில் வெற்றி அடைவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் நமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுமங்களின் ஊடாக வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்..

நீங்கள் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளவராக இருந்தால் கிராமசேவகர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. குறித்த குழுமத்தில் கிராம சேவகர் பரீட்சை வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், பயிற்சி வினாக்கள் மற்றும் நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவோம்..

பொதுவாக பலர் மத்தியில் நிலவுகின்ற விண்ணப்பித்தல் தொடர்பான சந்தேகங்களையும் அதற்கான பதில்களையும் இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.

.

NOTE– கிராம சேவகர் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலை டவுன்லோட் செய்ய வேண்டுமாயின் இங்கு கிளிக் செய்யவும் DOWNLOAD

1.Gs exam இற்கு விண்ணப்பிக்க சாதாரண தரத்தில் என்ன results வேணும்?

சாதாரண தரத்தில் ஒரே sheet இல் நான்கு பாடங்களில் திறமைச் சித்தி கட்டாயமாக இருக்கவேண்டும்.. குறித்த நான்கு பாடங்களில் உங்கள் மொழி பாடம்(தமிழ் அல்லது சிங்களம்) மற்றும் கணிதம் ஆகிய பாடம் உள்ளடங்கி இருக்க வேண்டும்..

இந்த நான்கு திறமைச் சித்தி களுக்கு மேல் அதிகமாக இன்னும் இரண்டு பாடங்களில் சாதாரண சித்தி இருக்க வேண்டும்.. எனவே மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருக்க வேண்டும்..

2.சிலருக்கு தமிழ் அல்லது கணிதத்தில் திறமை சித்தி இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் மற்றைய எல்லா பாடங்களிலும் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்கலாம்.. அப்படியானவர்கள் விண்ணப்பிக்க முடியுமா ?

முடியாது.. இது ஒரு போட்டி பரீட்சை என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வர்த்தமானியில் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த தகைமைகளை கட்டாயமாக ஒவ்வொரு விண்ணப்பதாரியின் பூர்த்தி செய்திருக்க வேண்டும்..

3.இரண்டாம் தடவை சாதாரண தர பரீட்சை எழுதி தமிழ் அல்லது கணிதம் மட்டும் C எடுத்துள்ளேன்.. விண்ணப்பிக்க முடியுமா?

NO..முடியாது

4.Gs exam இற்கு விண்ணப்பிக்க உயர்தரத்தில் என்ன results இருக்க வேண்டும்?

உயர்தரத்தில் எந்தப் பாடப் பிரிவாக இருந்தாலும் ஒரே sheet இல் 3 பிரதான பாடங்களிலும்  சித்தி இருக்க வேண்டும்..(பொது ஆங்கிலம்/பொது வினாத்தாள் என்பன இதில் உள்ள அடங்காது)

5.குறித்த பரீட்சைக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியுமா? தற்சமயம் பட்டப்படிப்பு செய்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

ஆம்.. பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.. தற்சமயம்  பட்டம் பயின்று கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்..

6.குறித்த பரீட்சைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியுமா?

YES

7.பரீட்சைக்கான கட்டணம் எவ்வளவு அதனை எங்கு செலுத்த முடியும்?

கட்டணம் 600 ரூபாய்.. இலங்கையில் உள்ள எந்த தபால் அகத்திலும் (post office) செலுத்த முடியும்..

8.Gs பரீட்சைக்கு என்ன என்ன பாடத்தில் வினாத்தாள்கள் வரும்..?

இரண்டு வினாத்தாள்கள் இருக்கும்..

1. மொழித்திறன்

2. பொது அறிவு, நுண்ணறிவு..

இரண்டு வினாத்தாள்களும் தலா ஒன்றரை மணித்தியாலங்கள் ஐ கொண்டது..

9.மொழித்திறன் என்றால் என்ன?

இலக்கண பகுதிகளையும், எழுத்துத்திறன் பகுதிகளையும் கொண்டது..உங்கள் மொழி தொடர்பான அறிவை பரிசோதிக்கும் பரீட்சை ஆகும்..

10.பொது அறிவும் நுண்ணறிவும் பகுதியில் எப்படி வினாக்கள் வரும்?

Mcq மற்றும் சுருக்க வினாக்கள் வரும்..

11.விண்ணப்பிப்பதற்கான சரியான வயதில்லை என்ன?

சரியான வயதெல்லை 21-35

அதாவது 1986.06.28 இற்கு பின்னர் பிறந்தவர் ஆகவும் 2000.06.28 இதற்கு முன்னர் பிறந்தவர் ஆகவும் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..

உதாரணமாக நீங்கள் 2000.06.29  திகதி பிறந்திருந்தால் கூட விண்ணப்பிக்க முடியாது..(ஒருவேளை விண்ணப்ப முடிவுத் திகதி மாற்றப்பட்டால் அதற்கு ஏற்ப குறிப்பிட்ட திகதியும் மாற வாய்ப்பு உள்ளது.. அப்படி மாறும் சந்தர்ப்பத்தில் மட்டுமே சிலருக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.) 

எழுத்துப் பரீட்சையில் நான் சித்தி அடைந்து விட்டால் நியமனம் கிடைக்குமா?

இல்லை.. எழுத்துப் பரீட்சை என்பது 50 புள்ளிக்கான  போட்டிப்பரீட்சை மட்டுமே.. எஞ்சிய 50 புள்ளிகளும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு வழங்கப்படும்..

12.நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெறுவதற்கு எழுத்துப் பரீட்சையில் என்ன புள்ளிகளைப் பெற வேண்டும்?

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் எத்தனை கிராம சேவகர்கள் வெற்றிடங்கள் நிலவு கின்றன என்பதை பொருத்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மாறுபடும்..

உதாரணமாக உங்கள் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வெற்றிடங்கள்  நிலவினால் 10 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்..(அதாவது இரண்டு மடங்கு)

எனவே உங்கள் பிரதேச செயலாளர் பிரிவில் எழுத்துப் பரீட்சை எழுதிய விண்ணப்பதாரிகள் இன்  புள்ளிகள் அடிப்படையில் ஒழுங்கு படுத்தும் பொழுது நீங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் படுவீர்கள்..

13.நேர்முகப் பரீட்சையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்?

நேர்முகப் பரீட்சையில் உங்கள் தலைமைத்துவ பண்பு பரிசோதிக்கப்படும்.. கணணி தொடர்பான உங்கள் அடிப்படை அறிவு தொடர்பாக பரிசோதிக்கப்படும்..உங்கள் தாய் மொழி தவிர்ந்த மற்றைய மொழிகளில் எந்த அளவுக்கு புலமைத்துவ உள்ளது என்பது பரிசோதிக்கப்படும்.. மற்றும் மேலதிகமாக விளையாட்டு திறன்கள் தொடர்பாக பரிசோதிக்கப்படும்..

மொத்தமாக நேர்முகப் பரீட்சைக்கு 50 புள்ளிகள் உள்ளது.. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் தனித்தனியாக புள்ளிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்..

இறுதியாக உங்கள் எழுத்துப் பரீட்சையில் புள்ளிகளும் நீங்கள் நேர்முகப் பரீட்சைகள் பெற்ற புள்ளிகளும் கூட்டப்படும்..

அதனடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும்..

14.பரிட்சையில் வெற்றி அடைந்த பின் நேரடியாக நியமனம் கிடைக்குமா?

இல்லை.. உங்கள் பிரதேச செயலகத்தில் மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்ட  பின்னரே நியமனங்கள் வழங்கப்படும். மூன்று மாத பயிற்சி காலத்தின் போது 3000 ரூபாய் மாத கொடுப்பனவு வழங்கப்படும்..

குறித்த பயிற்சி காலத்தில் 80 percentage வரவு கட்டாயமாக இருக்கவேண்டும்.