தினமும் எனது இணையதளத்தை சில ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள் .இது பலருக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பித்து அதில் ஏதாவது ஒரு வேலையாவது நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதி களுக்காக இந்த பதிவு..
நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் ஒரு JOB SCAM பற்றியதுதான் இந்த பதிவு..
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு அரசு வேலை வாய்ப்பை(GOVERNMENT JOB) பெற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.. அதிலும் இந்த காலத்தில் அரசியல் செல்வாக்குடன் பலர் வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக் கொள்வதால் பல பரீட்சைகள் எழுதி அதில் ஏதாவது ஒரு பரிட்சையில் சிறந்த புள்ளியை பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டு 30,000 ரூபாய் சம்பளத்துடன் ஒரு அரசு வேலையை பெற்றுக் கொள்வது இங்கு ஒரு சாதனைதான்..
அப்படி இருக்கும் பொழுது முகப்புத்தகத்தில்(FACEBOOK) உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி உங்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் 10 பத்து ரூபாய் பிடுங்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?
முகப்புத்தகத்தில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பதிவிடும் பக்கங்கள் காணப்படுகின்றன..பெரும்பாலான பக்கங்கள் உண்மையான தகவல்களையே பதி விடுகின்றன. ஆனால் சில பக்கங்களில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் கட்டாயம் உங்கள் கண்களில் இப்படியான பதிவுகள் பட்டு இருக்கும்..
சாதாரண தர தகைமை உடன் 110000 ரூபாய் சம்பளத்துடன் அரச வேலைவாய்ப்பு..
தரம் 8 படித்தவர்களுக்கு சுகாதார அமைச்சின் வேலைவாய்ப்பு..சம்பளம்-55000 ரூபாய்
இப்படியான கவர்ச்சிகரமான சம்பளத்தை கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருப்பார்கள்.. அதில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்..விண்ணப்பப்படிவத்தை இது மூலம் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள முடியும் என குறிப்பிட்டிருப்பார்கள்..
குறித்த லிங்கை கிளிக் செய்யும் போது செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்யுமாறு ஒரு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கும்..
அதை கிளிக் செய்யும் பொழுது விண்ணப்ப படிவம் டவுன்லோட் ஆகாது.. அதற்குப் பதிலாக உங்கள் மொபைலில் இருந்து தினந்தோறும் 10 ரூபாய் பணத்தை கட்டணமாக அறவிடும் ஒரு அறிவுறுத்தல் உங்கள் முன்னால் வந்து நிற்கும்.. குறித்த அறிவுறுத்தல் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு புகைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன்..
குறித்த அறிவுறுத்தலில் உள்ள SUBSCRIBE என்பதை பலர் அறியாமல் கொடுத்து விடுகிறார்கள்.. குறித்த நபர்களின் மொபைலில் இருந்து பத்து ரூபாய் பணம் ஒவ்வொரு நாளும் அவர்களை அறியாமலே அறவிடப்படும்..
ஒரு லட்சம் followers பக்கத்தில் கூட இப்படியான பதிவுகளை போடுகிறார்கள்.அதில் ஒரு 5000 நபர்கள் இப்படி சந்தாதாரர்கள் ஆக மாறி விட்டால் ஒரு நாளைக்கு 50000 வீதம் 30 நாட்களில் 15 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..
சாதாரணதரம் வரை படித்தவர்கள், உயர்தரம் வரை படித்தவர்கள், மற்றும் சாதாரண தரத்தை விட கல்வித்தகைமை குறைவாக உள்ளவர்களையே இவர்கள் அதிகம் இலக்கு வைத்து பதிவுகளை போடுகிறார்கள்..
அதற்கு காரணம் பொதுவாக சாதாரண தரம் படித்தவர்களுக்கு தமக்கு ஒரு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும்.. ஆனால் தமது கல்வித் தகைமை அதற்கு ஒரு தடையாக இருக்கலாம் என்ற ஒரு சிறிய மனச்சோர்வு அவர்களுக்கு உள்ளது.. ஆனால் உண்மையில் சாதாரணதர கல்வித் தகமை உடன் நிச்சயமாக ஒரு அரச வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.. ஆனால் கொஞ்சம் கடினமானது தான்..
ஒரு லட்சம் சம்பளத்துடன் சாதாரண தர கல்வி தகைமை உடன் ஒரு வேலை வாய்ப்பு கிடைத்து விடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை நாட்டை பொறுத்தவரையில் மிக மிகக் குறைவு.. சாத்தியமே இல்லை என்று கூட கூறலாம்..
இவ்வாறான கவர்ச்சியான சம்பளங்களை பார்த்தவுடன் இளைஞர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக தெரியாமல் இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.. உண்மையான வேலைவாய்ப்பு தகவல்களை அரச உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து எடுத்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படக்கூடிய நம்மைப் போன்ற பல இணையதளங்கள் மேற்குறிப்பிட்ட போலி இணையத் தளங்களின் ஆல் பாதிக்கப்படுகின்றன..
உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்வதென்றால் அண்மையில் சாதாரணதர தகைமை உடன் பதிவாளர் நாயகம் திணைக்கள வேலைவாய்ப்பு ஒன்றுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான பதிவை நான் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன்.. குறித்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஒரு நபர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்..
இந்தப் பதிவில் உள்ள லிங்கை கிளிக் செய்து யாரும் உள்ளே போகாதீர்கள்..10 ரூபாய் பிடுங்கும் கும்பல்.. என குறிப்பிட்டிருந்தார்..
நிச்சயமாக அவர் குறித்த போலி வேலைவாய்ப்பு இணையத்தளத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்..ஆதங்கத்தை அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.. அதில் எந்த தவறும் கிடையாது..
போலியான தகவல்களை வழங்கும் ஃபேஸ்புக் பக்கங்கள் ஆல் உண்மையான பதிவுகளைக் கூட மக்கள் பார்வையிட யோசிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் இணைய தளங்களை பொறுத்தவரையில் எந்த அளவிற்கு உண்மையான தகவல்கள் இருக்கின்றதோ அதே அளவுக்கு போலியான தகவல்களை வழங்கும் இணைய தளங்களும் காணப்படுகின்றன..
ஆன்லைனில் இப்படியான பிரச்சினைகள் இருப்பது கூட பலருக்கு தெரியாது.. எல்லாவற்றையும் உண்மை என நம்பக்கூடிய வெள்ளந்தி மனம் கொண்ட பலர் இப்படியான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தமது பணத்தை இழக்கிறார்கள்..
பல்வேறு இணையதளங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை இலவசமாக தனது இணைய தள பக்கங்களில் வாட்ஸ்அப். குழுமங்களில், டெலிகிராம் குழுமங்களில் வழங்குகிறார்கள்.. அப்படி நம்பகத்தன்மையுள்ள ஏதேனும் ஒரு குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. இப்படியான போலி இணையதள கும்பல்களின் குழுமங்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்…
மேற்குறித்த பதிவை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எதிர்காலத்தில் அவர்களும் இதில் பாதிக்கப்படாமல் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. இன்றும் கூட பலர் எதற்காக தன்னுடைய மொபைலில் தினந்தோறும் பத்து ரூபா அறவிடப்படுகிறது என்பது தெரியாமல் கூட இருக்கலாம்.. அவர்களையும் இந்த பதிவு சென்றடைய பகிர்ந்து கொள்ளுங்கள்..
VOG சிவச்சந்திரன் சிவஜானம் அவர்கள் இது தொடர்பாக தனது முகபுத்தகத்தில் இட்ட பதிவு..