HNDA அல்லது பல்கலைக்கழகம் ஒன்றில் வணிக நிர்வாகம் (B.B.A) அல்லது வர்த்தக துறையில் B.com முடித்தவர்களுக்கான அரச வேலைவாய்ப்பு.
வடமாகாண பொதுச்சபையின் ஆய்வு உத்தியோகத்தர் சேவையில் தரம் 3 பதிவுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
குறித்த பதவிக்கான சம்பள அளவுத்திட்டம்
பொது நிர்வாக சுற்றறிக்கை 3- 2014 அமைவான சம்பள தொகுதி MN 4-2016 ஏற்ப ஆய்வு உத்தியோகத்தர் சேவையின் தரம் 3 திரட்டிய மொத்த சம்பளம் 54250 ரூபாய் ஆகும்.
விண்ணப்பிப்பதற்கான பொதுவான தகமைகள்
விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடம் ஆக கொண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது குறித்த விண்ணப்பதாரி closing date இல் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியும் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும்.அல்லது விண்ணப்பதாரியின் பெற்றோர்கள் வடமாகாணத்தில் ஐந்து வருடங்கள் வசித்து இருத்தல் வேண்டும்..
விண்ணப்பதாரியின் வயது 21 தொடக்கம் 35 வரை இருக்க வேண்டும்.
குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகைமைகள் என்ன?
உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து விட்டால் போதுமானது.
அத்துடன் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொண்ட HNDA டிப்ளமா
அல்லது பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட BBA or B.Com பட்டம்
பரீட்சைக்கான கட்டணம் எப்படி செலுத்த வேண்டும்?
விண்ணப்பதாரி வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பிரதேச செயலக மன்றில் ரூபாய் 500 ஐ வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் அவர்களின் 3401 என்ற கணக்கிற்கு செலுத்தியதற்கான பற்று சீட்டினை விண்ணப்ப படிவத்தில் வராதவாறு குறித்த கூட்டினுள் ஒட்ட வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
குறித்த அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை A4 அளவில் தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 20.04.2021 இதற்கு முன்னர்
செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல 398/48 , கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் ஆய்வு உத்தியோகத்தர் சேவையின் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை 2021 என குறிப்பிட வேண்டும்.
பரீட்சை எப்படியான வினாத்தாள்களை கொண்டிருக்கும்?
பொதுவாக பரீட்சை இரண்டு வினாத் தாள்களை கொண்டது.
பொது உளச்சார்பு– இதில் நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு கிரகித்தல் படங்களை விளங்கிக்கொள்ளல் மொழித்திறன், உளச்சார்பு என்பவற்றை பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
கணக்கிடு– அடிப்படை கணக்கீடு தொடர்பான கேள்விகள் இதில் அடங்கியிருக்கும்.
இது ஒரு போட்டிப் பரீட்சை என்பதால் நியமனத்திற்கு தகமை பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள புள்ளிகளில் குறைந்தது 40 வீதம் ஆவது பரீட்சார்த்திகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் உடனுக்குடன் இலவசமாக பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE
நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள