Admission for full time NVQ 04 courses- Srilanka german training institute Kilinochchi

Admission for full time NVQ 04 courses- Srilanka german training institute Kilinochchi

CLOSING DATE EXTENDED- 15.10.2021

சாதாரண தரத்தில் சித்தி அடைந்தவர்களுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் Nvq Level 04 பயிற்சி நெறிகளை கற்பதற்கான வாய்ப்பு..

சாதாரண தர தகைமை மட்டும் கொண்டவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு குறித்த முழு நேரப் பயிற்சி நெறி கற்கை நெறிகள் மிக உதவியாக இருக்கும்.

 கற்கும் போது கிடைக்கும் விசேட சலுகைகள்

1.வெளி இடங்களை  சேர்ந்தவர்களுக்கு இலவசமான வதிவிட வசதிகள் வழங்கப்படும்.

2.மாதாந்தம் உதவித்தொகையாக 4 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

கற்கை நெறிகளின் விபரம்

  1. Automobile Mechanics
  2. Auto Electrician
  3. Power Electrician
  4. Air Conditioning and Refrigeration
  5. Electronics
  6. Machinist (Tool Machinery)
  7. Welder
  8. Baker
  9. Laboratory Technician (Food & Technology)
  10. Assistant Quantity Surveyor
  11. Draft Person
  12. Construction Site Supervisor
  13. Surveying Field Assistant
  14. ICT Technician
  15. Computer Hardware & Network Technician

விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்

1.சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி

2.அல்லது குறித்த பாடநெறிக்கு உரிய nvq level 3 தகைமை

விசேட திறமை உள்ள விண்ணப்பதாரிகளுக்கு குறிப்பாக தேசிய அல்லது மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெற்ற சான்றிதழ் வைத்திருப்போர் விசேட கவனத்தில் எடுக்கப்படும்

பரீட்சைக்கான கட்டணம் யாது?

பரீட்சைக்கான கட்டணமான ரூபாய் 500 மக்கள் வங்கி கிளையில் கீழே உள்ள கணக்கில் வைப்பில் இடப்பட்டு அதன் பற்றுச் சீட்டின் பிரதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்

கணக்கு இலக்கம் -048-1-001-8-0086726

குறித்த கற்கை நெறிக்கு எவ்வாறு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்?

எழுத்து மூல பரீட்சையில் ஆகக் கூடுதல் புள்ளிகளை பெறுபவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் தகைமை உடையவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் பின்தங்கிய மாவட்டங்களில் வெட்டுப் புள்ளிகள் நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு ஏற்ப குறைக்கப்படும்..

குறிப்பு – விளையாட்டு போன்ற சிறப்பு திறமைகள்  இருந்தால் அவைகளும் கவனத்தில் எடுக்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாறு விண்ணப்பப்படிவம் தயாரிக்கப்பட்டு அதன் உடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கல்விச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு

தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் முழு நேரப் பயிற்சி நெறிக்கு பயிலுணர்களை  சேர்த்தல் 2021 என குறிப்பிட வேண்டும்.

குறித்த விண்ணப்ப படிவத்தை15.10.2021 க்கு முன்னர் 

அதிபர், இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், அறிவியல் நகர், கிளிநொச்சி

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகமை உள்ள பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை உங்களுக்கு அனுமதி அட்டைகள் குறித்த திகதியில் கிடைக்கவில்லை எனில் 14 நாட்களுக்கு பின்னர் கீழ்  குறிப்பிடும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி இலக்கம்- 021- 4927799

APPLICATION FORMDOWNLOAD
ONLINE APPLICATION FORMDOWNLOAD

பின்வரும் கற்கை நெறி தொடர்பான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.