வங்க கடலில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் தற்பொழுது புறவி என்ற பெயருடைய புயல் காற்றாக மாறி இருப்பதுடன் 2ஆம் திகதி புதன்கிழமை மாலையில் இருந்து இரவுக்குள் பருத்தித்துறை க்கும் மட்டக்களப்பு க்கும் இடையேயான கரையை கடந்து வவுனியா ஊடாக சென்று மன்னார் வளைகுடாவை கடந்து அப்படியே தொடர்ந்து இந்தியாவின் பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்துக்கு இடையிலான கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது திருகோணமலை மாவட்டம் அதிகபட்ச பாதிப்பை எதிர்நோக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புயலுக்கு முன் நாம் செய்ய வேண்டியவை
கடல் கொந்தளிப்பு மழைவெள்ளம் இடிமின்னல் கடுங்காற்று அபாயங்கள் ஆரம்பமாகும் .புதன் கிழமை துவங்கி வியாழன் வரை வீட்டிலேயே இருங்கள்
மீனவர்கள் தயவுசெய்து கடலுக்கு செல்ல வேண்டாம்
வீட்டில் விளக்கு உடைய தென்னை ஓலைகள் சிறிய மரக்கிளைகளை வெட்டி அகற்றவும்
காற்றில் பறந்து உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய கண்ணாடிகள் ஓலைகள் கூர்மையான மற்றும் பாரமான பொருட்களை உங்கள் சூழலிலிருந்து அகற்றுங்கள்.
பிரதான மின் இணைப்பை துண்டித்து வைப்பது நல்லது
பெறுமதியான பொருட்கள் மட்டும் வீட்டுக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்
உங்களிடமிருக்கும் வாகனங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி அதனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
மிகவும் பாதுகாப்பு குறைவான வீடுகளில் வாழ்பவர்கள் தயவு செய்து அந்த இடத்தில் இருந்து இடம்பெயர்ந்து உங்கள் குடும்ப உறவினர்களின் வீடுகளில் உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
தகவல்களை உடனே அறிந்து கொள்ளவும் அவசியத் தேவைகளுக்காகவும் உங்கள் தொலைபேசியில் charge முழுதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
குடும்ப அங்கத்தவர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொதி தயார் செய்யவும் பிஸ்கட் முதலிய உணவுகள் குடிநீர் மற்றும் தீப்பெட்டி மெழுகுவர்த்தி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகள் என்பவற்றை முக்கியமாக எடுத்து வைக்கவும்.
புயல் காரணமாக கூரை பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
பழுதடைந்த சுவர் மற்றும் அபாயம் உள்ள வீடு அருகே மரங்கள் மின்கம்பங்கள் கொண்ட வீடுகள் குடிசை என்பவற்றில் வதிவிடமாகவும் கொண்ட வர்கள் கடலோரமாக 100 மீட்டர் தூரத்துக்குள் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி பொருத்தமான உறவினர் வீடுகளில் இருக்கவும்.
புயல் கடக்கும் நேரத்தில் செய்ய வேண்டியவை
பதட்டப்பட வேண்டாம் வீட்டை விட்டு வெளியேறவும் வேண்டாம் புயல் நீங்கும் வரை ஜன்னல் கதவுகளை மூடி வைக்கவும்
புயலால் வீடு சேதம் அடைந்தால் இயன்றவரை கட்டிலின்கீழ் அல்லது சமையலறைகளில் ஒதுங்கி கொள்ளவும்.
புயல் சில நேரங்களில் எதிர்பாராமல் நின்று சற்று நேரத்தின் பின் மீண்டும் சடுதியாக வீசலாம் எனவே புயல் வீசுவது திடீரென்று நின்று விட்டால் வேடிக்கை பார்க்க வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம்
புயல் கடந்துவிட்டது தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் வழி வந்த பின்னரே வீட்டை விட்டு வெளியேறவும்.
புயலுக்கு பின் செய்ய வேண்டியவை
கண்ணாடி பொருட்கள் நச்சுப் பதார்த்தங்கள் போன்றவை உங்கள் வளவுகளில் வீசப்பட்டு இருக்கலாம் அதனை உடனடியாக அகற்றவும்
புயல் நீங்கிய பின்னரும் மழை நடிக்கலாம் என்பதால் மின்னல் மற்றும் வெல்லம் தொடர்பாக அவதானம் செலுத்துங்கள்.
சூழலில் உள்ள குப்பை கூளங்களை அகற்றவும்.
இந்த தகவல்களை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ளுங்கள் இதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.
புயலின் நகர்வு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள எமது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்
.
Leave a Reply