இலங்கையில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் Ceylon Estate Workers Education Trust ஆல் மலையகத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மலையக பெருந்தோட்டங்களில் வாழும் இளைஞர் யுவதிகளை இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் ஆனால் யாரெல்லாம் பயன்பெற முடியும்?
உயர் தரத்தில் கற்கின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள்
அரச பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கை நெறியை தொடரும் மாணவர்கள்
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் அல்லது தொழிற் பயிற்சிக் கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள்.
குறித்த புலமைப்பரிசில் விண்ணப்பிப்பதற்கான தகைமை என்ன?
வயது 25 விட குறைவாக இருத்தல் வேண்டும்
கபோத சாதாரண தரத்தில் 6 பாடங்களில் திறமைச் சித்தி
அல்லது
உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன்
- உங்கள் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் பிரதிகள்,
- சாதாரண தரம் அல்லது உயர் தரத்தில் பெற்றுக்கொண்ட பரீட்சை பெறுபேறு களுக்கான சான்றிதழ்களின் பிரதிகள்,
- உங்கள் தாய் அல்லது தந்தை வேலை செய்ததற்கான சம்பள பற்றுச் சீட்டு (குறித்த பெரும் தோட்டத்தின் பொறுப்பாளரின் ஆல் உறுதிப்படுத்த பட்டிருக்க வேண்டும்) என்பவற்றை இணைத்து இந்திய தூதரகத்தின் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான இறுதித் திகதி -30.04.2021
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
Honorary Secretary, CEWET c/o High Commission of India,
P.O. Box 882, Colombo-03
விண்ணப்படிவம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD
*குறித்த புலமைப்பரிசில் தொடர்பான தகவலை மலையகத்தில் வாழுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நிச்சயம் அவர்களுக்கு உதவியாக அமையும்.*
இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் இது தொடர்பாக வெளியான அறிவித்தல் கீழே உங்கள் பார்வைக்கு
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மற்றும் கற்கை நெறிகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் நீங்கள் பெற்றுக் கொள்ள விரும்பினால் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE