சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- வெளியான விசேட வர்த்தமானி

வர்த்தமானி அறிவித்தலில் வெளியான அரசாங்கத்தின் அறிவிப்பு.. வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தின் (driving license)செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதி ஆகும் அனைத்து வாகன அனுமதிப் பத்திரங்களை செல்லுபடியாகும் காலம் 6 மாதங்கள் ஆல் நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன ஆணையாளரின் கையொப்பத்துடன் வெளியாகி உள்ள வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது சாரதி அனுமதிப்பத்திரங்களை குறித்த சலுகைக் காலம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மற்றும் அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE