change in the time limit for conducting the oL and Al examination ..
சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை நடத்தும் கால எல்லையில் அதிரடி மாற்றம்..
சாதாரண தர பரீட்சையில் ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது.
தரம் 10 மற்றும் 11 ஆகியவற்றுக்கான கால அளவை இரண்டு வருடங்களில் இருந்து ஒரு வருடம் 9 மாதங்களாக மாற்றி அமைப்பதற்காக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது..
சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகியவற்றின் பெறுபேறுகளை மூன்று மாதங்களில் வெளியிடுவதன் மூலம் ஆக இந்த இரண்டு செயல்முறைக்கும் எடுக்கின்ற 45 மாதங்களில் இருந்து 32 மாதங்களாக குறைக்க முடியும்..
அடுத்ததாக உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் மீள் பரிசோதனை செய்யப்பட்டு வெளியிடுவதற்கு முன்னரே z புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்குதல் மூலம் மாணவர்கள் உயர் தரப் பரீட்சை எழுதியதில் இருந்து பல்கலைக்கழகம் செல்வதற்கு இடைப்பட்ட காலத்தை குறைக்க முடியும்.
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் மீள் பரிசோதனையின்போது புள்ளிகள் அதிகரித்த மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கென தனியான z புள்ளிகள் வழங்கப்பட்டு பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுக் கொள்வார்கள்..
இந்த நடைமுறை மாற்றத்தின் மூலம் ஒரு மாணவன் தன்னுடைய முதலாவது பட்டப்படிப்பை மிக விரைவாக பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த புதிய நடைமுறை 2023 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..