பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல்

சிங்களம்-ஆங்கிலம்/ தமிழ்-ஆங்கிலம்/ சிங்களம்-தமிழ் மொழிகள்

அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் போது, முதன்மையான பணியொன்று தொழில்சார் மொழிபெயர்ப்பாளர்களினால் நிறைவேற்றப்படுகிறது. மொழிபெயர்ப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் காணப்பட்ட போதும் உரிய தகைமைகளை உடையோர் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். இந் நிலைமையைக் கருத்திற் கொண்டு  மொழிபெயர்ப்பிற்கான தொழில்சார் தகைமையை (DOL Professional Qualification in Translation) ஏற்படுத்துவதற்காக, மொழிபெயர்ப்பு குறித்த ஒருவருட கால  முழுநேர தொழில்சார் கற்கைநெறியொன்று அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வமுள்ள  மற்றும் பின்வரும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை எழுத்துத் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இப்பாடநெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் பின்னர் அரச மொழிபெயர்ப்பாளர் என்ற ரீதியில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரிகள் பின்வரும் மூன்று மொழி வகைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

  1. சிங்களம் – ஆங்கிலம் மொழி வகை
  2. தமிழ் – ஆங்கிலம் மொழி வகை
  3. சிங்களம் – தமிழ் மொழி வகை

ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்/ நிபந்தனைகள்

  1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  2. சிறந்த நடத்தையுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்.
  3. இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கு இணங்குதல் வேண்டும்.
  4. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்கு குறைவானவராகவும் இருத்தல் வேண்டும்.
  5. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியில் கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள்

(i). சிங்களம் – ஆங்கிலம் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்

(ii). தமிழ் – ஆங்கிலம் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்

(iii). சிங்களம் – தமிழ் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்

மற்றும்

க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (தாய்மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மற்றும்

க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) அல்லது மொழிபெயர்ப்பு (சிங்களம்/தமிழ் மொழி பிரிவின் கீழ்) டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

அரசகரும மொழிகள் ஆணையாளர்  நாயகத்தினால்  நடாத்தப்படும் எழுத்துத் பரீட்சையொன்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் மற்றும் தகைமைகளைப் பரீட்சிக்கும்  நேர்முக பரீட்சையின் பின்னர்  முன்மொழியப்பட்ட ஒருவருட கால தொழில்சார் கற்கைநெறிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆட்சேர்ப்பிற்கான நிபந்தனைகள்

தாங்கள் விண்ணப்பிக்கும் மொழி வகைக்குரிய  ஒவ்வொரு  வினாத்தாளுக்கும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரிகளில் முறையே அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்ட 25 விண்ணப்பதாரிகள் அம்மொழி வகையின் கீழ் பாடநெறியை பயிலுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு 03 மொழி வகைகளுக்கு 75 பயிலுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி ஒருவர் தனது வாய்ப்பை நிராகரிப்பாராயின், முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் அடுத்து அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரிக்கு  சந்தர்ப்பம்  உரித்தாகும்.

ஒவ்வொரு பட்டதாரி பயிலுநருக்கும் மாதாந்தக் கொடுப்பனவொன்று இவ் ஒருவருட காலப் பகுதியில் வழங்கப்படும்.

பரீட்சை நடாத்துதலும் பாடத்திட்டமும்

எழுத்துப் பரீட்சை – பாடத்திட்டம்

மொழி வகைவினாத்தாள்உள்ளடக்கம்நேரம் (மணித்தியாலங்கள்)மொத்தப் புள்ளிகள்சித்தியடைந்த புள்ளிகள்
சிங்களம் – தமிழ்மொழிபெயர்ப்பு – சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு

மொழிபெயர்ப்பு – தமிழ் மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு

நிர்வாகம் , சட்டம், விஞ்ஞானம், தொழிநுட்பவியல், இலக்கிய ஆவணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  பகுதிகளை மொழிபெயர்த்தல்.
2 ½




2 ½
100




100
40




40
சிங்களம்- ஆங்கிலம்மொழிபெயர்ப்பு – சிங்கள மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு

மொழிபெயர்ப்பு – ஆங்கில மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு
2 ½




2 ½
100




100
40




40
தமிழ்- ஆங்கிலம்மொழிபெயர்ப்பு – தமிழ் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு

மொழிபெயர்ப்பு – ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு
2 ½




2 ½
100




100
40




40

(க.வே. – எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுகையில் அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியங்களின் பிரதிகளை பயன்படுத்துவதற்கு  அனுமதிக்கப்படும். இலத்திரனியல் சாதனங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தல் முற்றாகத் தடை.)

நேர்முகப்பரீட்சை

நேர்முகப்பரீட்சைக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. இப்பரீட்சை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் தகைமைகளை பரிசீலிப்பதற்கு மட்டுமே நடாத்தப்படும்.

பரீட்சைகளை நடாத்துதல்

2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்/ சமர்ப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

  1. அரசகரும மொழிகள் திணைக்கள இணையதளத்திற்கு பிரவேசித்து நிகழ்நிலை மூலமாக மட்டுமே அனுப்பிவைத்தல் வேண்டும்.
  2. பரீட்சைகளுக்கான அனுமதியட்டைகள் மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படுவதால், சரியான மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுதல் கட்டாயமானதாகும்.
  3. கணனிமயப்படுத்தும் வசதிக்காக விண்ணப்பப்படிவம் ஆங்கில மொழிமூலம் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும்.
  4. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அல்லது இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011-287723 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.