அரசாங்கத்தால் கோரப்படுகின்ற வேலைவாய்ப்பு ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பல விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன..அதில் மிக முக்கியமானது நாம் அனுப்புகின்ற விண்ணப்பப்படிவம் எந்த அளவு நேர்த்தியாக இருக்கிறது என்பது..
பெரும்பாலான அரச வேலை வாய்ப்புகளுக்கு தொடர்ச்சியாக விண்ணப்பித்து இருப்பீர்கள்.. ஆனால் உங்களுக்கு கேட்கப்பட்ட தகைமைக்கு மேலதிகமான கல்வித்தகைமை இருந்து ம் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளது..
ஆகவே அதன் அடிப்படையில் ஒரு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்ப படிவத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையில் கொடுத்துள்ளோம்..
அரச வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் எல்லா ஊடகங்கள் மூலமாகவும் பகிரங்கமாக கோரப்படுவது இல்லை..வர்த்தமானி அறிவித்தல் மூலம் தினசரி பத்திரிகை ஒன்றின் மூலமாகவே கோரப்படும்..
குறித்த அறிவித்தலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் யாவை?
1. குறித்த அறிவித்தல் எதன் மூலமாக கோரப்பட்டு உள்ளது..உத்தியோகபூர்வமான அரசு இணையதளம்(official government website) மூலமாக அல்லது வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அல்லது தினசரி பத்திரிகை அறிவித்தல் மூலமாக கோரப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் சில சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பொய்யான தகவல்களும் பரப்பப்படுகின்றன..
2. உறுதி செய்து கொண்ட பின்னர் தேவையான தகைமைகள் பற்றி கவனம் செலுத்துங்கள்..
(பொதுவாக உடல் தகைமைகள், கல்வித் தகைமைகள், தொழில் தகைமைகள் இந்த அடிப்படையில் மூன்று பிரிவுகளில் தகைமைகள் கேட்கப்பட்டிருக்கும்..)
3.குறித்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எந்த முறையின் மூலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
பொதுவாக அரச வேலை வாய்ப்புக்கு எழுத்துபரீட்சை(written exam) மற்றும் நேர்முக பரீட்சை (interview)ஆகிய முறைகள் மூலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படும்..
(எழுத்து பரீட்சை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குறித்த பரீட்சைக்கான கட்டணம் செலுத்தும் முறை தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.. அதை கவனத்தில் கொள்ளுங்கள்..
நேர்முகப் பரீட்சையின் போது எந்த ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.)
4. அடுத்து மிக முக்கியமான விடயம் வயதெல்லை. விண்ணப்ப முடிவுத் திகதி அன்று விண்ணப்பதாரியின் வயது எத்தனை இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
5. அடுத்து குறித்த சேவைக்கான நிபந்தனைகள் தொடர்பாக வாசிக்க வேண்டும்.. உதாரணமாக சில நேரங்களில் குறித்த ஒரு மாகாணத்தில் அல்லது நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும்..
சில நேரங்களில் விண்ணப்பிப்பவர்கள் குறித்த மாகாணத்தைச் சேர்ந்த வதிவிடப் பிரதிநிதி யாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட இருக்கலாம்..இதனை வாசிக்காமல் விண்ணப்பிக்கும் பொழுது நிச்சயமாக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
6. திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை தொடர்பான விபரங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும்..
குறிப்பாக பரீட்சைக்கான கட்டணம்.. ?அதை எங்கு செலுத்த வேண்டும்.. ?வங்கி கணக்கு இலக்கம்..???(bank account number,name and amount)
செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான பற்றுச் சீட்டை எந்த இடத்தில் இணைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..
அடுத்து பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அத்துடன் உங்கள் கையொப்பத்தை உறுதிப்படுத்தி தகுதி உடைய அதிகாரிகளின் விபரங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக வாசிக்க வேண்டும்..
பரீட்சை எந்த மாதிரியான வினாத்தாள்களை கொண்டிருக்கும்.. வழங்கப்படும் புள்ளிகள், எத்தனை புள்ளிகள் பெற்றால் சித்தி அடைந்ததாக கருதப்படும் இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்..
7.மிக முக்கியமாக வாசிக்க வேண்டிய விடயம் தவறான தகவல்களை நீங்கள் வழங்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கும்..
விண்ணப்பத்தை நிரப்பும்போது முக்கியமாக செய்ய வேண்டிய விடயங்கள் என்ன?
பொதுவாக அரச வேலை வாய்ப்புகளுக்கு இரண்டு வகையான விண்ணப்ப படிவங்கள் உண்டு..
1.உத்தியோகபூர்வமாக குறித்த அரச திணைக்களத்தால் வழங்கப்படும் விண்ணப்ப படிவம்..
2.அல்லது எம்மால் சுயமாக தயாரிக்கப்பட வேண்டிய விண்ணப்ப படிவம்..
குறிப்பிட்ட அறிவித்தலின் பிரகாரம் எந்த விண்ணப்ப படிவத்தை நாம் நிரப்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..
விண்ணப்ப படிவத்தில் தாளில் அளவு பொதுவாக A4 ஆகும்..அதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்..
அதேபோல் விண்ணப்பத்தில் உள்ள கேள்வி இலக்கங்கள் உதாரணமாக ஒன்று தொடக்கம் ஐந்து வரையான இலக்கங்கள் முதல் பக்கத்தில் வர வேண்டும் என சொல்லப்பட்டிருந்தால் அதேபோல் நீங்கள் பிரிண்ட் எடுக்கும் பொழுது செய்ய வேண்டும்.
தவறாக பிரிண்ட் எடுக்கும் பட்சத்தில் நிச்சயம் நிராகரிக்கப்படும்..
விண்ணப்ப படிவத்தில் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது ஒரு நல்ல பேனாவை பயன்படுத்தி எழுதி செய்வதுகூட சிறந்தது..
விண்ணப்பத்தை நிரப்பும்போது உங்கள் பெயர் ஏவ்வாறு கேட்கப் பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..
உதாரணமாக முதல் எழுத்துக்களுடன் பெயர் என சொல்லப்பட்டிருந்தால் உங்கள் பெயரையும் தந்தையின் பெயரின் முதல் எழுத்தையும் குறிப்பிட வேண்டும்..
முழுப்பெயர் எனக் எடுக்கப்பட்டிருந்தால் தந்தையின் பெயருடன் உங்கள் பெயரை முழுமையாக எழுத வேண்டும்.
வயதை குறிப்பிடும்பொழுது விண்ணப்ப முடிவுத் திகதி யிலிருந்து நீங்கள் பிறந்த திகதியை கழித்து வரக்கூடிய வருடங்கள் மாதங்கள் நாட்கள் என்ற தொடர் ஒழுங்கில் குறிப்பிட வேண்டும்..
பரீட்சைக்கான கட்டணம் செலுத்திய பற்று சீட்டின் விபரங்களை சரியாக நிரப்பி அதன் ஒரு பிரதியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்..
ஏற்கனவே அரச உத்தியோகம் ஒன்றில் இருப்பவர்கள் உங்களுடைய கையொப்பத்தை நீங்கள் வேலை செய்கின்ற அரச நிறுவனத்தின் தலைவர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்..அரச சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கு அமைய நீங்கள் ஒரு அரச நியமனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்னுமொரு அரச நியமனம் கொண்ட வேலைக்கு விண்ணப்பித்தால் அது உங்களின் பணிப்பாளர் அல்லது அரச நிறுவன தலைவரின் அனுமதியுடன் நடைபெறுகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்..
அரச சேவையில் இல்லாதவராக இருந்தால் குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள.தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்கள் மூலம் உங்கள் விண்ணப்ப படிவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான கையொப்பங்கள் உம் அதாவது விண்ணப்பதாரி மற்றும் கையொப்பத்தை உறுதிப்படுத்தி பவர் ஆகிய கையொப்பங்கள் ஒரே நேரத்தில் இடப்பட வேண்டும் அதாவது கையொப்பம் இடப்பட்டும் திகதி ஒரே தேதியாக இருக்க வேண்டும்..
பூரணபடுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை எப்பொழுதும் ஒரு போட்டோ கொப்பி பிரதி எடுத்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானது..
விண்ணப்பத்தை வைத்து அனுப்புகின்ற தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிடுவது அவசியமானது.
அனுப்பப்படும் தபாலை பதிவு தபால் மூலம் அனுப்பி அதற்கான பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தின் நகல் பிரதி, கட்டணம் செலுத்தப்பட்ட நகல் பிரதி, பதிவுத் தபாலில் அனுப்பி அதற்கான பற்றுச் சீட்டு இவை மூன்றையும் ஒரே கோவையில் போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
பொதுவாக விண்ணப்பங்கள் பூர்ண படுத்தப்படும் போது குறித்த சில மாவட்டங்களுக்கான இலக்கங்கள், அல்லது பரீட்சை நிலையங்களுக்கான இலக்கங்கள் அறிவித்தலில் வழங்கப்பட்டிருக்கும். குறித்த இலக்கங்களை சரியாக அடையாளங்கண்டு பொருத்தமான கூட்டினுள் போட வேண்டும்..
பொறுமையாக பூர்ண படுத்தப்பட்ட விண்ணப்பத்தை ஒன்றுக்கு மூன்று தடவை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..
நேர்த்தியான விண்ணப்பம் சரியான நேரத்தில் உங்கள் அரசு வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு முதல்படியாக அமையும்..
குறித்த கட்டுரை அரசு வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள முனைந்து கொண்டிருக்கும் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Post by — Admin- Ceylonvacancy.com